டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இன்பினிக்ஸ் ஸீரோ 5 அறிமுகம்.!
இன்பினிக்ஸ் ஸீரோ 5 ஸ்மார்ட்போன் பொதுவாக 2.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ பி25 செயலியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.
ஹாங்காங்கை சார்ந்த மொபைல் உற்பத்தியாளரான இன்பினிக்ஸ் இப்போது புதிய இன்பினிக்ஸ் ஸீரோ 5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது, மேலும் கறுப்பு, சாம்பெய்ன் தங்கம் மற்றும் போர்டியக்ஸ் சிவப்பு போன்ற வண்ண விருப்பங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
இன்பினிக்ஸ் ஸீரோ 5 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடலை மிக எளிமையாக வாங்க முடியும்.

டிஸ்பிளே:
இக்கருவி 5.98-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்(1080-1920)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மீடியாடெக்:
இன்பினிக்ஸ் ஸீரோ 5 ஸ்மார்ட்போன் பொதுவாக 2.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ பி25 செயலியைக் கொண்டுள்ளது,
மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.

டூயல் ரியர் கேமரா:
இன்பினிக்ஸ் ஸீரோ 5 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா எனத் தொவிக்கப்பட்டுள்ளது, மேலும்
இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்இடி ப்ளாஷ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்
மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:
டூயல்-சிம், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, ஆடியோ ஜாக் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4350எம்ஏஎச்:
இன்பினிக்ஸ் ஸீரோ 5 ஸ்மார்ட்போனில் 4350எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
இன்பினிக்ஸ் ஸீரோ 5 பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி முறையே ரூ.17,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி முறையே ரூ.19,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications