20K பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை காலி செய்ய களமிறங்கும் ஸீரோ 5.!

ஸ்மார்ட்போன் பற்றிய டீஸர் வீடியோ ஒன்று இயக்கருவி இந்தியாவில் ப்ளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாக விற்பனைக்கு கிடைக்குமென்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

|

இன்பினிக்ஸ் நிறுவனம், வருகிற நவம்பர் 14ஆம் தேதி துபாயில் நடக்குமொரு நிகழ்வில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. கூறப்படும் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது ஸீரோ 5 என்று அழைக்கப்படுகிறது.

20K பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை காலி செய்ய களமிறங்கும் ஸீரோ 5.!

இக்கருவி சார்ந்த அம்சங்கள் பற்றிய விவரங்கள் மறைமுகமாக வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ட்விட்டரில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் பற்றிய டீஸர் வீடியோ ஒன்று இயக்கருவி இந்தியாவில் ப்ளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாக விற்பனைக்கு கிடைக்குமென்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

டூயல் கேமரா அமைப்பு

டூயல் கேமரா அமைப்பு

அறிமுகமான ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரும். வெளியானதொரு அறிக்கையின்படி, இன்பினிக்ஸ் ஸீரோ 5 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000/- என்ற விலைப்பிரிவில் என்கிறது தொலைபேசியின் அம்சங்களை பொறுத்தமட்டில், ஒரு பெஸல்லெஸ் டிஸ்பிளே மற்றும் டூயல் கேமரா அமைப்புடன் வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி

குறிப்பிடத்தக்க வகையில், 18: 9 என்கிற காட்சி விகிதத்துடன் வெளியாகும் நிறுவனத்தின் முதல் முழு திரை ஸ்மார்ட்போன் இதுவென கூறப்படுகிறது. இதர அம்சங்களை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய உள் சேமிப்பு ஆகியவற்றுடன் வரலாம்.

உலோக யூனிபாடி வடிவமைப்பு

உலோக யூனிபாடி வடிவமைப்பு

இந்த தொலைபேசியின் தனித்துவமான விற்பனை புள்ளியாக அதன் கேமரா அம்சம் திகழ்கிறது. அது டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் பரந்த-கோண லென்ஸின் கலவையை கொண்டுருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்டிருக்குமென வதந்திகள் கூறுகின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆழமான நீலம் மற்றும் சிவப்பு உட்பட பல்வேறு வண்ண விருப்பங்கள் வெளிவரலாம்.

இன்பினிக்ஸ் நோட் 4

இன்பினிக்ஸ் நோட் 4

இந்நிறுவனம் இதற்கு முன்னர் இந்தியாவில், அதன் ஹாட் 4 ப்ரோ மற்றும் நோட் 4 ஸ்மார்ட்போன்களை முறையே ரூ.7,499/- மற்றும் ரூ.8,999/-க்கு அறிமுகம் செய்தது. இன்பினிக்ஸ் நோட் 4 ஆண்டு ஒரு 5.7 அங்குல முழு எச்டி (1080பி) டிஸ்பிளே, மீடியா டெக் எம்டி6753 ஆக்டா-கோர் செயலி மற்றும் 3 ஜிபி ரேம் கொண்டுள்ளது.

4300எம்ஏஎச் பேட்டரி

4300எம்ஏஎச் பேட்டரி

கேமராத்துறையை பொறுத்தமட்டில், நோட் 4 ஆனது பிடிஏஎப், இரட்டை எல்இடி ப்ளாஷ் உடனான ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 8 மெகாபிக்சல் செல்பே கேமரா கொண்டுள்ளது. இது 4300எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ

இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ

மற்றொரு ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ ஆனது 5.5 இன்ச் எச்டி (720பி) டிஸ்ப்ளே, மீடியாடெக் எம்டி6737 க்வாட் கோர் ப்ராஸசர், 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix Zero 5 launching on November 14; to be priced under Rs 20,000. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X