இறங்கி அடிச்ச Infinix.. 24GB ரேம், AI Eraser, 144Hz AMOLED டிஸ்பிளே, 108MP கேமரா.. என்ன மாடல்? என்ன விலை?
Infinix September 18 India Launch: ஆஹா இப்படி ஒரு "தரமான" இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனுக்காக தானே இவ்வளவு நாட்களாக காத்து கிடந்தோம் என்று கூறும் அளவிலான அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயத்தின் கீழ் உருவான ஒரு மாடல், வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அது இன்பினிக்ஸ் ஸீரோ 40 5ஜி (Infinix Zero 40 5G) ஸ்மார்ட்போனாகும். இதில் அப்படி என்ன ஸ்பெஷல்? இது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
க்ளோபல் லான்ச் டூ இந்தியா லான்ச்: கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று உகலளவில் அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் ஸீரோ 40 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை இன்பினிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. பின்னர் இது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனிக் செல்லிங் பாயிண்ட்: இன்பினிக்ஸ் ஸீரோ 40 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக - இன்பினிக்ஸ் ஏஐ (Infinix AI) இருக்கும். இதன்கீழ் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் (Artificial intelligence features) ஆன ஏஐ ஏரேசர் மற்றும் ஏஐ வால்பேப்பர் (AI Eraser and AI Wallpaper) போன்றவைகள் அணுக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பெயர் குறிப்பிடுவது போலவே, ஏஐ வால்பேப்பர் ஆனது வால்பேப்பர்களை உருவாக்க உதவும் ஏஐ அம்சமாகும்; ஏஐ ஏரேசர் என்பது நீங்கள் எடுத்த புகைப்படங்களில் இருந்து தேவையற்ற பொருட்களை அகற்ற உதவும் ஏஐ அம்சமாகும். கூடுதலாக ஏஐ கட்-அவுட் ஸ்டிக்கர் (AI Cut-Out Sticker) என்கிற அம்சமும் அணுக கிடைக்கும். இது பயனர்கள் கட்அவுட்களில் இருந்து ஸ்டிக்கர்களை உருவாக்க அனுமதிக்கும்.
இன்பினிக்ஸ் ஸீரோ 40 5ஜி ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் (Infinix Zero 40 5G Specifications)? இன்பினிக்ஸ் ஸீரோ 40 5ஜி ஸ்மார்ட்போனின் இந்தியன் வேரியண்ட் (Indian Variant) ஆனது "பெரும்பாலும்" க்ளோபல் வேரியண்ட்டில் (Global Variant) உள்ள அதே அம்சங்களை தான் தக்கவைத்து கொள்ளும்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு மற்றும் TUV ரைன்லேண்ட் ஐ-கேர் மோட் சான்றிதl உடனான 6.78-இன்ச் 3டி கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.
சிப்செட்டை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் (MediaTek Dimensity 8200 SoC) மூலம் இயக்கப்படும், இது 24ஜிபி வரையிலான டைனமிக் ரேம் மற்றும் 512ஜிபிவரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான இன்பினிக்ஸ் யுஐ மூலம் இயங்கும்
கேமராக்களை பொறுத்தவரை, இன்பினிக்ஸ் ஸீரோ 40 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உடனான 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சாரை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு பிரத்யேக கோப்ரோ பயன்முறையையும் கொண்டுள்ளது, இது பயனர்கள் எந்தவொரு கோப்ரோ டிவைஸையும் ஸ்மார்ட்போனுடன் இணைக்க உதவுகிறது. பேட்டரியை பொறுத்தவரை , இது 45W வயர்டு மற்றும் 20W வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது
இந்தியாவில் இன்பினிக்ஸ் ஸீரோ 40 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் (Infinix Zero 40 5G Price in India)? இது ரூ.30,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். ஏனென்றால் இன்பினிக்ஸ் ஸீரோ 40 5ஜி ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.33,500 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications