Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.25000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D கர்வ் டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் பட்ஜெட் விலையில் மிட்-ரேன்ஞ் பீச்சர்களை கொடுத்து பட்டையை கிளப்பி வரும் இன்பினிக்ஸ் நிறுவனமானது, இப்போது 3டி கார்வ்ட் அமோலேட் டிஸ்பிளே, சாம்சங் சென்சார் மெயின் கேமரா, ஐசோசெல் சென்சார்‌ செல்பி கேமரா, 45W பாஸ்ட் சார்ஜிங், 20W வயர்லெஸ் சார்ஜிங், 5000mAh பேட்டரி‌ போன்ற பீச்சர்களை கொண்ட இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி‌ (Infinix ZERO 40 5G) போனை‌ பட்ஜெட்டில் களமிறக்கி இருக்கிறது. இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி‌ அம்சங்கள் (Infinix ZERO 40 5G Specifications): இந்த போன் டிசைன் மற்றும் பீச்சர்களில் மிரளவிடுகிறது. வயலெட் கார்டன் (Violet Garden), மூவிங் டைட்டானியம் (Moving Titanium) மற்றும் ராக் பிளாக் (Rock Black) ஆகிய கலர்களில் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே டிசைன் வருகிறது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.25000 பட்ஜெட்ல 108MP கேமரா.. எந்த போன்?

6.78 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) உள்ளது.

இந்த டிஸ்பிளேவுக்கு அடுத்ததாக கேமரா பீச்சர்கள் பிரீமியமாக இருக்கின்றன. சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவோடு 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது.

மெயின் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். கேமரா ஷூட்டங் மோட்களுக்காக கோப்ரோ மோட் (GoPro Mode) சப்போர்ட் வருகிறது. இதற்காக பிரத்யேகமாக கோப்ரோ குயிக் ஆப் (GoPro Quik App) வருகிறது. சாம்சங் ஐசோசெல் ஜேஎன்1 (Samsung ISOCELL JN1) சென்சாருடன் 50 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.25000 பட்ஜெட்ல 108MP கேமரா.. எந்த போன்?

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்கள் கிடைக்க இருக்கின்றன. பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8200 Ultimate 4nm) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் எக்ஸ்ஓஎஸ் 14,5 (XOS 14.5) மற்றும் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. ஜேபிஎஸ் நிறுவனத்தின் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), IP54 ரெசிஸ்டன்ட் வகுகிறது. 45W வயர்டு சார்ஜிங், 20W வயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி‌ விலை (Infinix ZERO 40 5G Price): இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின்‌ விலை‌ ரூ.27,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின்‌ விலை‌ ரூ.30,999ஆகவும்‌ இருக்கிறது. ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் உடன்‌‌ விற்பனைக்கு வர‌ இருக்கிறது. ஆகவே ரூ.24,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் விற்பனை‌ தொடங்குகிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சாம்சங் சென்சார் மெயின் கேமரா மற்றும் செல்பீ கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்கள் கம்மியான பட்ஜெட்டில் வேண்டுமானால், இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி மாடலை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Infinix ZERO 40 5G With 50MP Camera Launched Sale From September 21 in Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X