பொளக்குது விற்பனை.. ரூ.24000 பட்ஜெட்ல 108MP கேமரா.. 24GB ரேம்.. 3D டிஸ்பிளே.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
108 எம்பி மெயின் கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை பட்ஜெட்டில் கொடுப்பது மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் லுக்குடன் வெளியாகி மார்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி (Infinix ZERO 40 5G) போனுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிளிப்கார்ட் டிஸ்கவுண்ட் (Flipkart Discount) விவரங்கள் இதோ.
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் போன்களில் பக்கா மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொடுத்து தனி இடம் பிடித்துள்ள இன்பினிக்ஸ் நிறுவனமானது, இப்போது பிரீமியம் போன்களை பட்ஜெட்டில் கொடுக்க தொடங்கிவிட்டது. இதில் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஃபைபாஸ் சார்ஜிங் கொண்ட பேட்டரி சிஸ்டம், பொக்கே கேமரா சிஸ்டம் பேக் செய்துள்ள இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போனும் இருக்கிறது.

இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி அம்சங்கள் (Infinix ZERO 40 5G Specifications): 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொஷன் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.
மேலும், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் பக்கா அவுட்புட் கொடுக்கும். டிஸ்பிளேவை போலவே பேட்டரி மிரளவிட்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 20W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மேலும், 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் பேக் செய்துள்ளது.
இதுபோக பைபாஸ் சார்ஜிங் (BYBASS Charging) டெக்னாலஜி கிடைக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் மோட்களும் இருக்கின்றன. ஐஆர் ரிமோட் கன்ட்ரோல் (IR Remote Control) கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ரெஸ் வயர்லெஸ் ஆடியோ (Hi-Res Wireless Audio) உள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலை ஆர்டர் செய்யலாம்.

மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலும் கிடைக்கிறது. இந்த மாடல்களில் 12 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8200 Ultimate 4nm) சிப்செட் உள்ளது.
இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போனில் 08 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சாருடன் மெயின் கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக் கிடைக்கிறது.
50 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்த பிரீமியம் போனின் விலை ரூ.27,999 பட்ஜெட்டில் இருக்கிறது. இப்போது பிளிப்கார்ட்டில் ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட இந்த போனை வெறும் ரூ.24,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications