மார்க்கெட்டே அதிர போகுது.. 108MP கேமரா.. 45W சார்ஜிங்.. அறிமுகமானது Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 40 4ஜி மற்றும் இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி ஸ்மார்ட்போன்களை மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன்கள் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது இன்பினிக்ஸ் ஜீரோ 40 சீரிஸ் போன்களின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் ஜீரோ 40 4ஜி அம்சங்கள் (Infinix Zero 40 4G Specifications): 6.74-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் ஜீரோ 40 4ஜி. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது.

தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி100 சிப்செட் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 40 4ஜி ஸ்மார்ட்போன். மேலும் XOS 14.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் மேம்பட்ட ஏஐ (AI) அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
108எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 50எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஜேபிஎல் சவுண்ட் ட்யூனிங், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், புளூடூத், என்எப்சி, வைஃபை 5 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி அம்சங்கள் (Infinix Zero 40 5G Specifications): 6.74-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி . மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1500Hz டச் சாம்பிளிங் ரேட், 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 40 4ஜி ஸ்மார்ட்போன். மேலும் XOS 14.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் மேம்பட்ட ஏஐ அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

108எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 50எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 20W வயர்லெஸ் சார்ஜிங், ஜேபிஎல் சவுண்ட் ட்யூனிங், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், புளூடூத், என்எப்சி, வைஃபை 5 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
மிஸ்டி அக்வா (Misty Aqua), ப்ளாசம் க்ளோ (Blossom Glow) மற்றும் ராக் பிளாக் (Rock Black) போன்ற நிறங்களில் இன்பினிக்ஸ் ஜீரோ 40 4ஜி போன் வாங்க கிடைக்கும். பின்பு வயலட் கார்டன் (Violet Garden), மூவிங் டைட்டானியம் (Moving Titanium) மற்றும் ராக் பிளாக் (Rock Black)
நிறங்களில் இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போனை வாங்க முடியும். மேலும் இன்பினிக்ஸ் ஜீரோ 40 4ஜி போனின் விலை USD 289 (இந்திய மதிப்பில் ரூ.24,235)-ஆக உள்ளது. பின்பு இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போனின் விலை USD 399 (இந்திய மதிப்பில் ரூ.33,460)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








