செப்டம்பர் 18 உறுதி.. 108எம்பி கேமரா.. 12ஜிபி ரேம்.. 45W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் Infinix 5ஜி போன்..
இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி (Infinix Zero 40 5G) ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது இந்த போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் கடந்த மாதம் மலேசியாவில் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக வரும் செப்டம்பர் 18-ம் தேதி இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இன்பினிக்ஸ் ஏஐ (Infinix AI) எனும் அம்சத்துடன் இந்த போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே வெளியான இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி அம்சங்கள் (Infinix Zero 40 5G Specifications): 6.74-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) டிஸ்பிளே உடன் இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி இந்தியாவுக்கு வரும். மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1500ர்ண டச் சாம்பிளிங் ரேட், 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 40 4ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் அனைத்து ஆப்ஸ்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம். சுருக்கமா கூறவேண்டும் என்றால் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
அதேபோல் XOS 14.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் இந்த அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. மேலும் மேம்பட்ட ஏஐ அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் போன்.
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்டு இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
108எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.

5000mAh பேட்டரி பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 20W வயர்லெஸ் சார்ஜிங், ஜேபிஎல் சவுண்ட் ட்யூனிங், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், புளூடூத், என்எப்சி, வைஃபை 5 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் போன்
வயலட் கார்டன் (Violet Garden), மூவிங் டைட்டானியம் (Moving Titanium) மற்றும் ராக் பிளாக் (Rock Black) நிறங்களில் இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போன் அறிமுகமாகும். அதேபோல் ரூ.33,000 பட்ஜெட்டில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications