மார்க்கெட்டே திணறப்போகுது.. 108MP கேமரா.. 45W சார்ஜிங்.. வருகிறது புது Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனம் அடுத்து இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி (Infinix Zero 40 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதுவும் 108எம்பி கேமரா, 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மர்ட்போன். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி (Infinix Zero 40 5G Specifications): 6.78-இன்ச் கர்வ்டு எட்ஜ்களை (Curved Edges) கொண்ட அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரிலா கிளாஸ் (Corning Gorila Glass ) போன்ற அம்சங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

டைமன்சிட்டி 8200 அல்டிமேட் சிப்செட் (Dimensity 8200 Ultimate chipset) உடன் இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜிபோன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
XOS 14.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக ஒன்பிளஸ் 12 போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போன்.
5000mAh பேட்டரியுடன் இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை கொண்டுள்ளது இந்த போன் அறிமுகமாகும்.
12ஜிபி ரேம் (12 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

OIS ஆதரவு கொண்ட 108எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் + 2எம்பி ஆக்ஸிலரி சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போன். மேலும் ஐஆர் பிளாஸ்டர் (IR blaster) ஆதரவு, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக ரூ.32,000 பட்ஜெட்டில் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








