Home
Mobile

கிடைக்காத கம்மி விலை.. வெறும் ரூ.21,999 போதும்.. 12GB ரேம்.. 108MP கேமரா.. கர்வ்ட் டிஸ்பிளே.. எந்த மாடல்?

பட்ஜெட் விலையில் 108 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 21ஜிபி ரேம், டைமன்சிட்டி 8020 சிப்செட், 68W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஜீரோ 30 (Infinix Zero 30) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி அம்சங்கள் (Infinix Zero 30 5G Specifications): இந்த போன் 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz PWM டிம்மிங், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5)பாதுகாப்பு வருகிறது.

வெறும் ரூ.21,999 விலைக்கு 12GB ரேம்.. 108MP கேமரா.. எந்த மாடல்?

இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 8020 6என்எம் (Octa Core Dimensity 8020 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாலி - ஜி77 எம்சி9 ஜிபியு (Mali-G77 MC9 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் 8 ஜிபி ரேம் மாடலில் கூடுதலாக 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் மாடலில் கூடுதலாக 9 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் கேமரா சிஸ்டமானது, டிரிபிள் ரியர் செட்டப் கொண்டுள்ளது.

ஆகவே, சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சார் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 13 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் 4K 60 fps வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.

இதே சப்போர்ட் உடன் சாம்சங் ஐசோசெல் ஜேஎன்1 (Samsung ISOCELL JN1) சென்சார் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மெயின் கேமராவில் டூயல் எல்இடி லைட் இடம்பெற்றுள்ளது. இந்த இன்பினிக்ஸ் மாடலில் 68W பிடி 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

மேலும், இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res audio) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போனுக்கு IP53 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. முதல்முறையாக இந்த போன் 5000mAh பேட்டரி கொண்டிருந்தும் வெறும் 187 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.

இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரை, ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்ஃஎப்சி (NFC), வை-பை 8 (Wi-Fi 8) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போன் ரோம் கிரீன் கோல்டன் ஹவர் மற்றும் பேண்டஸி பர்பிள் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று (செப்டம்பர் 2) முதல் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது. இந்த ப்ரீ-ஆர்டருக்கு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஆக்சிஸ் பேங் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதோடு அனைத்து வங்கி கார்டுகளுக்கும் 6 மாதத்துக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.23,999 விலைக்கு விற்பனையாகும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.21,999க்கு வாங்கிக்கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Zero 30 With 12GB RAM, Dimensity 8020 Available Pre-Order From Flipkart Price, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X