அதிரவிடும் பட்ஜெட்.. 21GB ரேம்.. 108MP கேமரா.. 3D கர்வ்ட் டிஸ்பிளே.. வேகன் லெதர் பேனல்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டை மீண்டும் புரட்டிப்போடும் விதமாக பட்ஜெட் விலையில் 21ஜிபி ரேம், 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 108எம்பி கேமரா, பிரீமியம் கிளாஸ் வேகன் லெதர் பினிஷிங் பேக் பேனல் போன்ற பிரத்யேக அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஜீரோ 30 போன் வெளியாக இருக்கிறது.
இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனத்தின் பட்ஜெட் விலை போன்களுக்கென, இந்தியாவில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் இன்பினிக்ஸ் நோட் 30 போன் முதல் அண்மையில் வெளியான இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன் வரை விற்பனையில் சக்கைப்போடு போட்டதை அனைவரும் அறிவோம். இந்த பட்ஜெட் மோகத்தை மேலும் தூண்டிவிடும் விதமாக இன்பினிக்ஸ் ஜீரோ 30 (Infinix Zero 30) போன் களமிறங்க இருக்கிறது.

இன்பினிக்ஸ் ஜீரோ 30 அம்சங்கள் (Infinix Zero 30 Specifications): இந்த போனில் 6.78 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 60 டிகிரி 3டி கர்வ்ட் டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் போன் 50 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இந்த கேமரா மூலம் 4K தரத்தில் வீடியோ ரெக்கார்ட் செய்துகொள்ள முடியும். அதேபோல 108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கோமரா கொண்ட ரியர் செட்டப் வருகிறது.
இந்த போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் எக்ஸ்ஓஎஸ் வி13.1.0 (XOS V13.1.0) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 1100 எஸ்ஓசி (MediaTek Dimensity 1100 SoC ) சிப்செட் கொண்டுள்ளது. அதோடு மாலி - ஜி77 ஜிபியு (Mali-G77 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த போனின் பேக் பேனல், பிரீமியம் கிளாஸ் வேகன் லெதர் பினிஷிங் (Premium Glass Vegan Leather Finish) கொண்டுள்ளது. ரோம் கிரீன் (Rome Green) மற்றும் கோல்டன் ஹவர் (Golden Hour) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. IP53 தர டஸ்ட் மற்றும் பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது.
இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 போனானது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் 8 ஜிபி ரேம் மாடலில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் மாடலில் 9 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது.
ஆகவே, 12 ஜிபி மாடலில் மொத்தமாக 21 ஜிபி ரேம் கிடைக்கும். மேலும், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. மேற்கூறிய அம்சங்கள் மட்டுமே, இதுவரையில் கசிந்துள்ளன. இந்த போன் அடுத்த சில வாரங்களில் வெளியாக இருக்கிறது.
வரும் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், இந்தியாவில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன. இதற்கு ஏற்றால் போல இன்பினிக்ஸ் இந்தியா எக்ஸ் (X) பக்கத்தில், அந்த போனின் செல்பீ கேமரா அம்சங்களை குறிப்பிட்டு, விரைவில் வெளியாகும் என்று போஸ்ட் போடப்பட்டுள்ளது. ஆகவே, இன்பினிக்ஸ் ஜீரோ 30 போன் வெளியாவது உறுதியாகிவிட்டது.
இந்த போனின் விலையை பொறுத்தவரையில், ரூ.15,000 முதல் ரூ.18,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே, இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ (Infinix GT 10 Pro) பட்ஜெட் விலையில், வெளியாகி இந்திய மார்கெட்டில் தனி இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








