அலறும் மார்க்கெட்! மீண்டும் ரூ.15,000 பட்ஜெட்டில் 16GB ரேம், 108MP கேமரா.. அடுத்த இன்பினிக்ஸ் மாடல்!
இந்தியாவில் மலிவு விலை போன்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கும் இன்பினிக்ஸ் நிறுவனம், அடுத்ததாக இன்பினிக்ஸ் ஜீரோ 30 (Infinix Zero 30) போனை களமிறக்க இருக்கிறது. இந்த போனின் அம்சங்கள், வெளியீட்டு தேதி உள்ளிட்ட விவரங்கள் இதோ.
இப்போதெல்லாம், மிட்-ரேஞ்ச் போன்களைவிட பட்ஜெட் விலை போன்களுக்கே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏனென்றால், 16 ஜிபி ரேம் தொடங்கி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் என்று ரூ.25,000 மதிப்புள்ள போன்களில் கிடைக்கும் அம்சங்கள், சமீபகாலமாக ரூ.15,000 பட்ஜெட் போன்களில் கொடுக்கப்படுகிறது.

இந்த மாதிரியான அட்டகாச அம்சங்களுடனும், கம்மியான விலையிலும் போன்களை களமிறக்குவதில், இப்போதைக்கு இன்பினிக்ஸ் நிறுவனத்தை அடித்துக் கொள்ள முடியாது என்றே சொல்ல வேண்டும். அந்த நிறுவனத்தின், இன்பினிக்ஸ் ஹாட் 30, இன்பினிக்ஸ் நோட் 30 மற்றும் அண்மையில் வெளியான இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன்ற போன்கள் கம்மியான விலையில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருப்பது, இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டையே வியக்க வைத்திருக்கிறது.
இப்போது, மீண்டும் கம்மியான விலையில் இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி போனை களமிறக்க இருக்கிறது. இப்போது, இந்த போனின் அம்சங்கள் கசிந்துள்ளன. இது ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட், ஆர்ம் மாலி ஜி77 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் போன்ற பக்கவான அம்சங்களை கொண்டுள்ளது. இதன் மற்ற அம்சங்கள், பிப்ரவரி மாதம் வெளியான இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி (Infinix Zero) போனை போலவே இருக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்த நேரத்தில் இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி போனின் அம்சங்களை தெரிந்துகொள்வது நல்லது. இந்த இன்பினிக்ஸ் போன், 6.78 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
இந்த போன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அந்த வகையில், 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போன் 8 ஜிபி ரேம் + 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.
அதன்படி 13 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு 256 ஜிபி மைக்ரோ எஸ்டிகார்டு சப்போர்ட் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 12 (XOS 12) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 1080 6nm) சிப்செட் கொண்டுள்ளது.
அதோடு மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த போன் ரூ.15,000 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆகவே, இந்த அம்சங்களுடன் கூடுதலாக 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1100 (Octa Core MediaTek Dimensity 1100) சிப்செட், 108 எம்பி கேமரா போன்றவற்றுடன் இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி போன் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
ஏனென்றால், சமீபத்தில் ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியான இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனில், இந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த போனும் ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








