வேற சாய்ஸே வேணாம்.. 108எம்பி கேமரா.. 16ஜிபி ரேம்.. 5000mAh பேட்டரி.. பட்ஜெட் விலை.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அடுத்து இன்பினிக்ஸ் ஜீரோ 30 (Infinix Zero 30)எனும் போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். தற்போது இந்த புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 30 போன் ஆனது FCC சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது.
எனவே இன்பினிக்ஸ் ஜீரோ 30 போன் ஆகஸ்ட் மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. 5ஜி ஆதரவு, டைமன்சிட்டி சிப்செட், 108எம்பி ரியர் கேமரா போன்ற பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வளைந்த 10-பிட் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 போன். அதேபோல் 20 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரிலா கிளாஸ் 5 (Corning Gorila Glass 5) பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் கூட துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 60எம்பி கேமராவுடன் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக தரமான கேமரா போன் வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 போனை வாங்குவது நல்லது.
இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனில் 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது.
இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் லாவெண்டர் (lavender) மற்றும் கோல்டன் (golden) கலர்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் கேமரா மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். பின்பு 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1100 (Octa Core MediaTek Dimensity 1100) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன். எனவே வீடியோ எடிட்டிங், கேமிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு இந்த போன் அருமையாகப் பயன்படும். குறிப்பாக இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அருமையான கேமரா வசதி, தரமான சிப்செட், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த போனில் இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








