எந்த போனும் வராது.. கம்மி பட்ஜெட்டில் 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவில் எந்தவொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் கொடுக்காத முடியாத கம்மி பட்ஜெட்டில் 108எம்பி கேமரா, 50எம்பி 4K செல்பீ கேமரா, 12ஜிபி ரேம், 5000mAh பேட்டரி, 68W சார்ஜிங் போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஜீரோ 30 (Infinix Zero 30) போன் விற்பனைக்கு வருகிறது.
இன்பினிக்ஸ் ஜீரோ 30 அம்சங்கள் (Infinix Zero 30 Specifications): இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 1100 எஸ்ஓசி (MediaTek Dimensity 1100 SoC ) சிப்செட் வருகிறது. அதோடு எக்ஸ்ஓஎஸ் வி13.1.0 (XOS V13.1.0) மற்றும் மாலி - ஜி77 ஜிபியு (Mali-G77 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கிராபிக்ஸ் கார்டு கேமிங் பிரியர்களுக்கு பட்டாசான அனுபவத்தை கொடுக்கும். இந்த போனில் பிரீமியம் 3டி கர்வ்ட் டிசைன் கொண்ட 6.78 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
இந்த போனுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் போன் குவாட் எல்இடி லைட்டுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, 108 எம்பி (OIS) மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ கோமரா வருகிறது.
அதோடு, இந்தியாவில் முதல்முறையாக 4K 60 FPS சப்போர்ட் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் பிக்சல் ஜூமிங் டெக்னாலஜி (Pixel Zooming Technology), டூயல் வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட், ஃபிலிம் மோட் (Film Mode) போன்ற பிரத்யேக அம்சங்கள் வருகின்றன.
இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 போன், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலில் விற்பனைக்கு வருகிறது. அதோடு 9 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் இருக்கிறது. ஆகவே, மொத்தமாக 21 ஜிபி ரேம் வருகிறது. இந்த இன்பினிக்ஸ் போனில் 68W சூப்பர் சார்ஜ் (Super Charge) சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது.
இந்த பேட்டரியை வெறும் 30 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜ் செய்துகொள்ள முடியும். மேலும், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், பேஸ் அன்லாக், டூயல் ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் ஆடியோ மற்றும் IP53 தர டஸ்ட் மற்றும் பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. அதோடு வை-பை 6 (Wi-Fi 6), என்எப்சி (NFC), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.
இவ்வளவு அம்சங்கள் போதாதென்று, பிரீமியம் கிளாஸ் வேகன் லெதர் பினிஷிங் (Premium Glass Vegan Leather Finish) பேனல் டிசைனும் கொண்டுள்ளது. இந்த போன் கோல்டன் ஹவர் (Golden Hour) மற்றும் ரோம் கிரீன் (Rome Green) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
ஒரு பிரீமியம் போனில் வரும் அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த மாடல் குறைந்தது ரூ.35,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்பினிக்ஸ் நிறுவனம், இந்த போனை ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்போவதாக இன்று (ஆகஸ்ட் 30) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விலையில், இப்படிவொரு போன் வெளியாவது, இதுவே முதல் முறையாகும். வரும் செப்டம்பர் 2ஆம் தேதி இந்த போனின் ப்ரீ-ஆர்டர் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தொடங்குகிறது. அப்போது, இந்த போனுக்கு அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த போனின் விற்பனை மிகப்பெரும் வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








