Home
Mobile

நாடே தவம் கிடக்கும் போனை பற்றி வெளியான முக்கிய தகவல்..108MP கேமரா, 12GB ரேம், 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் செப்டம்பர் 2-ம் தேதி இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ 5ஜி போன் இந்தியாவில் அறிமுகமாகும் என இன்பினிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

அதேபோல் செப்டம்பர் 2-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ 5ஜி போனை முன்பதிவு செய்ய முடியும். மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

நாடே தவம் கிடக்கும் போனை பற்றி வெளியான முக்கிய தகவல்..

இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Infinix Zero 30 5G specifications): 6.78-இன்ச் வளைந்த 10-பிட் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் வெளிவரும் இந்த போன். மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 950 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (360Hz touch sampling rate) மற்றும் சகார்னிங் கொரிலா கிளாஸ் 5 (Corning Gorila Glass 5) பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் கூட துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். குறிப்பாக இந்த போனின் கேமரா வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

குறிப்பாக செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் ஒன்பிளஸ் போன்களை விட சிறந்த கேமரா வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ 5ஜி போன் வெளிவருகிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8020 (Octa Core MediaTek Dimensity 8020) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன். எனவே வீடியோ எடிட்டிங், கேமிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு இந்த போன் அருமையாகப் பயன்படும். மேலும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடே தவம் கிடக்கும் போனை பற்றி வெளியான முக்கிய தகவல்..

குறிப்பாக இந்த போனின் பேக் பேனல், பிரீமியம் கிளாஸ் வேகன் லெதர் பினிஷிங் (Premium Glass Vegan Leather Finish) கொண்டுள்ளது. பின்பு ரோம் கிரீன் (Rome Green) மற்றும் கோல்டன் ஹவர் (Golden Hour) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி. அதேபோல் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி ஆனது ரூ.15,000 முதல் ரூ.18,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix Zero 30 5G to launch in India on September 2: check specifications, pre booking date, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X