Home
Mobile

108எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. இந்த மாதம் வரும் புது Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களில் அசத்தலான பல 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் இன்பினிக்ஸ் ஜீரோ 30 (Infinix Zero 30) எனும் போனையும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது இந்த இன்பினிக்ஸ் நிறுவனம்.

அதாவது தற்போது வெளியான தகவலின்படி, இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போர்ட் ஆனது இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 5ஜி ஆரவைக் கொண்டுள்ளது. அதேபோல் பட்ஜெட் விலையில் இந்த புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 30 போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

108எம்பி கேமரா.. இந்த மாதம் வரும் புது Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

இணையதளத்தில் வெளியான தகவலின்படி, இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1100 (Octa Core MediaTek Dimensity 1100) சிப்செட் வசதியுடன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் மீடியாடெக் டைமன்சிட்டி 1100 சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

அதேபோல் இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போனில் XOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன். எனவே செல்பி படங்களை அதிகம் விரும்பும் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளது.

வளைந்த 10-பிட் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே தனித்துவமான டிஸ்பிளே அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சகார்னிங் கொரிலா கிளாஸ் 5 (Corning Gorila Glass 5) பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் பாஸட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 போன் அறிமுகமாகும்.

குறிப்பாக இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் போன்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் வெளிவருகிறது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30. மேலும் இணையதளத்தில் வெளியான தகவலின்படி இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Zero 30 5G to launch in India later this August: Specs and photos leaked online : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X