60எம்பி செல்பி கேமரா.. பட்ஜெட் விலையில் அடுத்த 5ஜி போனை இறக்கும் Infinix.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
சமீபத்தில் தான் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்பினிக்ஸ் நிறுவனம் தனது அடுத்த பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. அதாவது இன்பினிக்ஸ் ஜீரோ 30 (Infinix Zero 30) எனும் போனை இந்த மாதம் (2023 ஆகஸ்ட்) இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளது.
குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் 5ஜி ஆதரவு, டைமன்சிட்டி சிப்செட், 108எம்பி ரியர் கேமரா எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த போனின் புகைப்படங்கள் கூட இணைய தளத்தில் கசிந்துள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் டிடிஎஸ் சவுண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1100 (Octa Core MediaTek Dimensity 1100) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போனில் XOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேபோல் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 60எம்பி கேமராவுடன் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். அதேபோல் பெரிய பேட்டரியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும்.
அதாவது இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதிக்கு தகுந்தபடி, சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு வளைந்த 10-பிட் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சகார்னிங் கொரிலா கிளாஸ் 5 (Corning Gorila Glass 5) பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவரும்.
லாவெண்டர் (lavender) மற்றும் கோல்டன் (golden) கலர்களில் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுடன் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications








