முன்பதிவு செய்ய ரெடியா.. 108எம்பி கேமரா.. 6.78-இன்ச் டிஸ்பிளே.. வருகிறது இன்பினிக்ஸ் போன்.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ 5ஜி வரும் செப்டம்பர் 2-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த போனின் முன்பதிவு குறித்தும் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது செப்டம்பர் 2-ம் தேதியே இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ 5ஜி போனை முன்பதிவு செய்ய முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் போன்களுக்கு போட்டியாக இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ 5ஜி அம்சங்கள்: 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் வெளிவரும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8020 (Octa Core MediaTek Dimensity 8020) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
6.78-இன்ச் வளைந்த 10-பிட் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் வெளிவரும் இந்த போன். மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 950 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (360Hz touch sampling rate) மற்றும் கார்னிங் கொரிலா கிளாஸ் 5 (Corning Gorila Glass 5) பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
அதேபோல் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.
இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி போனின் பேக் பேனல், பிரீமியம் கிளாஸ் வேகன் லெதர் பினிஷிங் (Premium Glass Vegan Leather Finish) கொண்டுள்ளது. பின்பு ரோம் கிரீன் (Rome Green) மற்றும் கோல்டன் ஹவர் (Golden Hour) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வரும் இந்த அசத்தலான இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி.
5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போன் குறைந்த எடையைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி போன் ரூ.25,000 விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








