Home
Mobile

நாளைக்கு லான்ச் ஆகும் இந்த போனுக்கு நிறைய பேர் வெயிட்டிங்.. 108எம்பி கேமரா.. 12ஜிபி ரேம்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் நாளை (ஆகஸ்ட் 30) இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல் இந்த புதிய போனை செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் மூலம் முன்பு செய்யலாம் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் சிப்செட் குறித்து தற்போது முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நிறுவனம் தெரிவித்த தகவலின்படி, இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். குறிப்பாக இது ஒரு சக்திவாய்ந்த சிப்செட் ஆகும். மேலும் இது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 போனை நம்பி வாங்கலாம். மேலும் ஏற்கனவே வெளியான இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

நாளைக்கு லான்ச் ஆகும் இந்த போனுக்கு நிறைய பேர் வெயிட்டிங்..

இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 போன் 6.78-இன்ச் வளைந்த 10-பிட் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் வெளிவரும் . மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 950 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (360Hz touch sampling rate) மற்றும் கார்னிங் கொரிலா கிளாஸ் 5 (Corning Gorila Glass 5) பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன். பின்பு மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் வெளிவரும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.

குறிப்பாக இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி போனின் பேக் பேனல், பிரீமியம் கிளாஸ் வேகன் லெதர் பினிஷிங் (Premium Glass Vegan Leather Finish) கொண்டுள்ளது. பின்பு ரோம் கிரீன் (Rome Green) மற்றும் கோல்டன் ஹவர் (Golden Hour) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வரும் இந்த போன்.

நாளைக்கு லான்ச் ஆகும் இந்த போனுக்கு நிறைய பேர் வெயிட்டிங்..

5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் இன் டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு குறைந்த எடையில் இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி போன் அறிமுகமாகும்.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.25,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும். மேலும் தனித்துவமான வடிவமைப்பு, தரமான சிப்செட், அருமையான கேமரா வசதி எனப் பல சிறப்பு அம்சங்கள் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி போனில் இருப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Zero 30 5G Launching in India Tomorrow: Camera, Chipset Details Officially Revealed : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X