Home
Mobile

ஆரம்பமே ரூ.2000 சலுகை.. 108எம்பி கேமரா.. 12ஜிபி ரேம்.. இன்று விற்பனைக்கு வரும் புதிய Infinix 5ஜி போன்..

இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ 30(Infinix Zero 30) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இன்பினிக்ஸ் ஜீரோ 30 போன் ஆனது இன்று (5-9-2023) மதியம் 12 மணி அளவில்பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதுவும் சலுகையுடன் இந்த போனை வாங்க முடியும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இன்பினிக்ஸ் ஜீரோ 30 போனின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.24,999-க்கு விற்பனைக்கு வரும். ஆனாலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 30 போனை ரூ.21,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

108எம்பி கேமரா.. இன்று விற்பனைக்கு வரும் புதிய Infinix 5ஜி போன்..

இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஆனது 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz PWM டிம்மிங், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5)பாதுகாப்பு வருகிறது. இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 மாடலில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 8020 6என்எம் (Octa Core Dimensity 8020 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாலி - ஜி77 எம்சி9 ஜிபியு (Mali-G77 MC9 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இன்பினிக்ஸ் ஜீரோ 30 போன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் 8 ஜிபி ரேம் மாடலில் கூடுதலாக 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் மாடலில் கூடுதலாக 9 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த போனில் சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சார் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 13 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் 4K 60 fps வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

108எம்பி கேமரா.. இன்று விற்பனைக்கு வரும் புதிய Infinix 5ஜி போன்..

மேலும் இந்த போனில் சாம்சங் ஐசோசெல் ஜேஎன்1 (Samsung ISOCELL JN1) சென்சார் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும், இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res audio) ஆகியவை இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

கனெக்டிவிட்டி அம்சங்களைப் பொறுத்தவரை, ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்ஃஎப்சி (NFC), வை-பை 8 (Wi-Fi 8) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போன் ரோம் கிரீன் கோல்டன் ஹவர் மற்றும் பேண்டஸி பர்பிள் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Zero 30 5G goes on sale today at 12 noon: Check Price, Specifications, Offers And More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X