பிச்சிக்குது சேல்.. வெறும் ரூ.19,949 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 3D டிஸ்பிளே.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் பிக் இயர் எண்ட் விற்பனையில் (Flipkart Big Year End Sale) 108எம்பி கேமரா, 16ஜிபி ரேம், கர்வ்ட் டிஸ்பிளே, 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட இன்பினிக்ஸ் ஜீரோ 30 போன் இதுவரை கிடைக்காத கம்மி விலைக்கு வந்துள்ளது.
இன்பினிக்ஸ் ஜீரோ 30 அம்சங்கள் (Infinix Zero 30 Specifications): இந்த போனில் வரும் டிஸ்பிளே, கேமரா, சிப்செட் அம்சங்களானது, பட்ஜெட்டைவிட மிகவும் பிரீமியமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதேபோல 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வருகிறது. இந்த டிஸ்பிளே பிரீமியம் வீடியோ அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேமில்லை.
இந்த போனில் சாம்சங் சென்சாருடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சாருடன் 108 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.
அதேபோல சாம்சங் ஐசோசெல் ஜேஎன்1 (Samsung ISOCELL JN1) சென்சார் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவிலும் 4K ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 1100 எஸ்ஓசி (MediaTek Dimensity 1100 SoC ) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது.

கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக மாலி - ஜி77 ஜிபியு (Mali-G77 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 போனில் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த போனில் 2 மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
ஆகவே, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி இருக்கின்றன. இதில் 8 ஜிபி வேரியண்ட்டில் கூடுதலாக 8 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 12 ஜிபி வேரியண்ட்டில் கூடுதலாக 9 ஜிபி டைனாமிக் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் வருகிறது. அதேபோல பேஸ் அன்லாக் சப்போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. IP53 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. டிடிஎஸ் ஆடியோ சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது. 5ஜி, 4ஜி, வை-பை 6, என்எப்சி, ப்ளூடூத் 5.3 போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் இருக்கின்றன.
இந்த போன் கோல்டன் ஹவர் (Golden Hour) மற்றும் ரோம் கிரீன் (Rome Green) மற்றும் பேண்டசி பர்பிள் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின் விலை குறைப்பு காரணமாக ரூ.22,999க்கு கிடைத்தது.

இப்போது, இந்த விலையில் ரூ.30,50 தள்ளுபடியை பிளிப்கார்ட் வழங்குகிறது. அதோடு ரூ.7,900 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கிகொள்ளலாம். ஆகவே, இந்த போனை வெறும் ரூ.19,949க்கு வாங்கி கொள்ள முடியும். பிளிப்கார்ட் பிக் இயர் எண்ட் விற்பனையை முன்னிட்டு இந்த தள்ளுபடி கிடைப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








