லோக்கல் பட்ஜெட்ல தூக்கல்.. 108MP கேமரா.. 50MP செல்பீ.. கர்வ்ட் AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
108எம்பி மெயின் கேமரா, 50எம்பி செல்பீ கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் போன்ற பக்காவான அம்சங்களை கொண்ட இன்பினிக்ஸ் ஜீரோ 30 4ஜி (Infinix Zero 30 4G) போன் விரைவில் வெளியாக இருக்கிறது.
இன்பினிக்ஸ் ஜீரோ 30 4ஜி போனின் அம்சங்கள் (Infinix Zero 30 4G Specifications) கசிந்து, ஸ்மார்ட்போன் பிரியர்களை அறக்க பறக்க செய்துள்ளது. இந்த போன் 6.67 இன்ச் கர்வ்ட் எட்ஜ் அமோலெட் (Curved-edge AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி (Octa Core MediaTek Helio G99 SoC) சிப்செட் வருகிறது. இந்த போனில் 108 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த மாடலில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வர வாய்ப்புள்ளது. ஆகவே, சிப்செட் மற்றும் ரேம் வேரியண்ட்களை தவிர மற்ற அம்சங்கள் 5ஜி மாடலுக்கு நிகராக கொடுக்கப்படும் என்பது உறுதியாகிறது.
இதனால், 5ஜி போனின் அம்சங்களை தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி மாடலில், 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) அமோலெட் கர்வ்ட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.
அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஆக்டா கோர் டைமன்சிட்டி 8020 6என்எம் (Octa Core Dimensity 8020 6nm) மற்றும் மாலி ஜி77 எம்சி9 (Mali-G77 MC9) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதேபோல ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் எக்ஸ்ஓஎஸ் 13 கொண்டுள்ளது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. சாம்சங் எச்எம்6 சென்சார் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமரா மாடலாகும்.
அதேபோல சாம்சங் ஐசோசெல் ஜேஎன்2 சென்சார் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி மாடலில் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனில் கோல்டன் ஹாவர், பேண்டஸி பர்பிள் மற்றும் ரோம் கிரீன் ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. ஆகவே, வரவிருக்கும் இன்பினிக்ஸ் ஜீரோ 30 4ஜி மாடல் ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்த போன் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








