யாரு சாமி அவன்? வெறும் ரூ.15000 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் வைக்கும்படி ரூ.15000 பட்ஜெட்டில் 108எம்பி கேமரா, 16ஜிபி ரேம், கர்வ்ட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஜீரோ 30 4ஜி (Infinix Zero 30 4G) போன் அறிமுகமாகி இருக்கிறது.
இன்பினிக்ஸ் ஜீரோ 30 4ஜி அம்சங்கள் (Infinix Zero 30 4G Specifications): இந்த இன்பினிக்ஸ் போன் 6.78 இன்ச் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (Curved AMOLED Display) கொண்டுள்ளது. இதுவொரு ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதோடு 920 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 10 பிட் கலர் சப்போர்ட் மற்றும் டிசிஐ-பி3 கலர் காமட் கொண்டிருக்கிறது. இந்த போனில் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 (Octa-core MediaTek Helio G99) சிப்செட் வருகிறது.
கேமிங் பிரியர்களுக்கான ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 (Arm Mali-G57 MC2) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டிருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் மாடலில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. இந்த மாடலில் 108 எம்பி அல்ட்ரா கிளியர் லென்ஸ் (Ultra Clear Lens) மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. இந்த கேமராவோடு டூயல் மைக்ரோ ஸ்லிட் ஃபிளாஷ் லைட் (Dual Micro-Slit Flashlight) இடம்பெற்றுள்ளது.

இதில் டூயல் வீடியோ (Dual Video), போர்ட்ராய்டு (PORTRAIT), சூப்பர் நைட் (SUPER NIGHT) மற்றும் ஷார்ட் வீடியோ (SHORT VIDEO) போன்ற பல்வேறு கேமரா பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கேமராவில் ஐசோசெல் (ISOCELL HM6) சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஐசோசெல் ஜேஎன்1 (ISOCELL JN1) சென்சாருடன் 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இந்த கேமராவில் 2K ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்துகொள்ளலாம். இந்த போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு டைப்-சி (Type-C) சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. இந்த போனில் IP54 தர ப்ளாஷ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனின்ல டூயல் நானோ சிம், ப்ளூடூத் 5.3, வை-பை 5, ஓடிஜி, டைப்-சி ஹெட்போன் ஜாக், என்எப்சி மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. டிடிஎஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் கொண்டிருக்கிறது. இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. இந்த போன் சன்செட் கோல்டு, மிஸ்டி கிரீன் மற்றும் பேர்ல் வைட் ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இவ்வளவு பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை வெறும் ரூ.15,181ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில், இந்தியாவில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, இந்த மாடலின் 5ஜி வெர்ஷன் வெறும் ரூ.23,000 பட்ஜெட்டில் இங்கு வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








