இந்த விலைல 108MP கேமரா எந்த போன்லையும் இல்லை.! Infinix Zero 20 விற்பனை இன்றா?

|

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில், இன்பினிக்ஸ் ஜீரோ 20 (Infinix Zero 20) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஸ்மார்ட்போனை நிறுவனம் நாட்டில் இன்று முதல் முறையாக விற்பனைக்கு கொண்டு வருகிறது. புதிய Infinix Zero 20 ஆனது MediaTek Helio G99 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

அடேங்கப்பா..! பட்ஜெட் விலையில் Infinix Zero 20 போனில் இப்படி பெஸ்ட் அம்சங்களா?

அடேங்கப்பா..! பட்ஜெட் விலையில் Infinix Zero 20 போனில் இப்படி பெஸ்ட் அம்சங்களா?

Infinix Zero 20 ஆனது 90Hz AMOLED டிஸ்ப்ளே பேனலை வழங்குகிறது. இது 4500mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 60 எம்பி செல்பீ கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய ஜீரோ சீரிஸ் ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்கள் பற்றிப் பேசுகையில் இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 8ஜிபி ரேம், பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் என்று பல விஷயங்களைக் கொண்டுள்ளது.

Infinix Zero 20 ஸ்மார்ட்போனில் கிடைக்கும் தரமான டிஸ்பிளே.!

Infinix Zero 20 ஸ்மார்ட்போனில் கிடைக்கும் தரமான டிஸ்பிளே.!

இந்தியாவில் Infinix Zero 20 விலை, விவரக்குறிப்புகள், அம்சங்கள் மற்றும் கிடைக்கும் தன்மை ஆகியவற்றை இப்போது கூர்ந்து கவனிப்போம். முதலில் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் சிறப்பம்ச விபரங்களைப் பற்றி பார்க்கலாம்.

புதிய Infinix Zero 20 ஆனது 90Hz AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது முழு HD+ தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது மற்றும் 6.7' இன்ச் அளவுகளைக் கொண்டுள்ளது.

பூமியில் விழுந்த விண்கல்.. 2 புது ஏலியன் தாதுக்கள்.! ஆடிப்போன விஞ்ஞானிகள்.! 3வது வேற இருக்கா?பூமியில் விழுந்த விண்கல்.. 2 புது ஏலியன் தாதுக்கள்.! ஆடிப்போன விஞ்ஞானிகள்.! 3வது வேற இருக்கா?

இன்பினிக்ஸ் ஜீரோ 20 போனின் சிப்செட் மற்றும் ஸ்டோரேஜ்

இன்பினிக்ஸ் ஜீரோ 20 போனின் சிப்செட் மற்றும் ஸ்டோரேஜ்

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பேனல் ஒரு மையப்படுத்தப்பட்ட பஞ்ச்-ஹோல் நாட்ச் உடன் முன்பக்க செல்பீ ஷூட்டரை கொண்டுள்ளது.

சமீபத்திய ஜீரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் உடன் வருகிறது. இது 6nm செயல்பாட்டில் உருவாக்கப்பட்டது.

இந்த சிப்செட் Mali G57 GPU, 8GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான XOS 12 உடன் வருகிறது.

கம்மி காசில் 108 எம்பி பிரைமரி கேமராவுடன் ட்ரிபிள் கேமராவா?

கம்மி காசில் 108 எம்பி பிரைமரி கேமராவுடன் ட்ரிபிள் கேமராவா?

கேமரா அம்சம் பற்றி பேசுகையில் இது 108 எம்பி பிரைமரி ஷூட்டரை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

இது 13MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2MP டெப்த் சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை ஆதரிக்கும் OIS ஆதரவுடன் 60MP முன்பக்க ஷூட்டர் மற்றும் டூயல் LED ஃபிளாஷ் அம்சத்தை கொண்டுள்ளது.

இந்த Xiaomi போன் வாங்குனவங்க பாவம்யா.! இனிமேல் இந்த போன்களுக்கு சேவை கிடைக்காது.!இந்த Xiaomi போன் வாங்குனவங்க பாவம்யா.! இனிமேல் இந்த போன்களுக்கு சேவை கிடைக்காது.!

45W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் சரியான சைஸ் பேட்டரி

45W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் சரியான சைஸ் பேட்டரி

சிறந்த கேமரா சென்சார்களுடன் இது பட்ஜெட் விலையில் மிக சிறந்த கேமரா அனுபவத்தை வழங்குகிறது. இந்த டிவைஸ் 4500mah பேட்டரி யூனிட் உடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது.

இது சார்ஜிங் மற்றும் டேட்டா பரிமாற்றங்களுக்கு டைப்-சி போர்ட்டை நம்பியுள்ளது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரை வழங்குகிறது.

இதில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது மற்றும் டிடிஎஸ் ஆடியோவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Infinix Zero 20 இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கிறதா?

Infinix Zero 20 இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கிறதா?

Infinix Zero 20 ஆனது கிளிட்டர் கோல்ட், ஸ்பேஸ் கிரே மற்றும் கிரீன் பேண்டஸி ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களில் டூயல் சிம், 4ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் க்ளோனாஸ் ஆகியவை அடங்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றி பார்க்கையில், இது ஒற்றை ஸ்டோரேஜ் விருப்பத்துடன் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

OnePlus மடக்ககூடிய போல்டபில் போனை ரிலீஸ் செய்கிறதா? எப்போப்பா வெளியவிடுவீங்க.!OnePlus மடக்ககூடிய போல்டபில் போனை ரிலீஸ் செய்கிறதா? எப்போப்பா வெளியவிடுவீங்க.!

Infinix Zero 20 விலை மற்றும் விற்பனை விபரம்

Infinix Zero 20 விலை மற்றும் விற்பனை விபரம்

இந்தியாவில் Infinix Zero 20 விலை 8GB + 128GB ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.15,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இன்று (டிசம்பர் 28) மதியம் 12:00 மணிக்கு Flipkart வழியாக வாங்குவதற்கு கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போனிற்கு சிறந்த மாற்றாக Redmi Note 11 SE, POCO M5 Pro மற்றும் Moto G72 போன்றவை திகழ்கிறது, இருப்பினும், இன்பினிக்ஸ் ஜீரோ 20 மட்டுமே OIS ஆதரவுடன் 60MP முன்பக்க ஷூட்டரைக் கொண்டிருக்கும் ஒரே போன் ஆகும்.

Best Mobiles in India

English summary
Infinix Zero 20 Budget Smartphone With 108MP Camera Goes On Sale Today In India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X