Home
Mobile

160 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் விரைவில் வெளிவரும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்.!

இன்பினிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன் மாடல்கள் கம்மி விலையில் சிறப்பான அம்சங்களுடன் வெளிவருகிறது என்றுதான் கூறவேண்டும்.

அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 9

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 9 ப்ரோ,சியோமி மி 11 ப்ரோ, மி 11 அல்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன்களில் கூட 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றள்ளது. ஆனால் இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன் 165 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதாவது இதுபோன்ற பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு சார்ஜர் வருவதால் குறிப்பிட்ட நேரத்தில் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

65 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட

ஆனால் 165 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம். இருந்தபோதிலும் விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் நிறுவனம் 90 ஹெர்ட்ஸ்

சமீபத்தில் இன்பினிக்ஸ் நிறுவனம் 90 ஹெர்ட்ஸ் ஆதரவு 6.95-இன்ச் டிஸபிளே மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 சிப்செட் மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆகியவற்றைக் கொண்ட நோட் 10 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் இதில் 160W சார்ஜிங் ஆதரிக்கப்படவில்லை. விரைவில் 165 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக்கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம்செய்யும் இன்பினிக்ஸ் நிறுவனம். மேலும் இன்பினிக்ஸ் நிறுவனம் இதற்குமுன்பு இந்தியாவில் அறிமுகம் செய்த இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ்

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ்

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில்

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி85, 12என்எம் சிப்செட் உடன் கார்டெக்ஸ்-ஏ75 கோர் வசதியும் இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

48எம்பி பிரைமரி லென்ஸ்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + ஏஐ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் மாடல். பின்பு 1080 பிக்சல் வீடியோ பதிவு ஆதரவு மற்றும் சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின்
கேமராக்கள்.

ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில்

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் 6000

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், டி.டி.எஸ் ஆடியோ மற்றும் டார்-லிங்க்அல்டிமேட் கேம் பூஸ்டர் போன்ற அம்சங்களும் இருப்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக
இருக்கும். வைஃபை, 4ஜி வோல்ட்இ, புளூடூத், ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி போர்ட் மற்றும் எஃப்.எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன்.

மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் மாடலை ரூ.9,999-விலையில் வாங்க முடியும். 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் மாடலை ரூ.10,999-விலையில் வாங்க முடியும்.

News Source: xda-developers.com

Best Mobiles in India

English summary
Infinix smartphone coming soon with 160w fast charging support.!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X