ஜன.28 இருக்கு கச்சேரி.. அடிமட்ட ரேட்ல வருது.. DUAL கேமரா.. 5000mAh பேட்டரி.. HD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித் தூக்கும்படி இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 9 எச்டி (Infinix Smart 9 HD) போன் களமிறங்க இருக்கிறது. டூயல் கேமரா, 5000mAh பேட்டரி, எச்டிபிளஸ் டிஸ்பிளே, 6 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொண்ட இந்த இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 9 எச்டி போனின் வெளியீட்டு தேதி மற்றும் பீச்சர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரம் இதோ.
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வருவது உறுதியாகிவிட்டது. ஆகவே, பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. ஜனவரி 28ஆம் தேதி இந்திய மார்கெட்டில் அறிமுகமாக இருக்கிறது. இப்போது, டிஸ்பிளே, பேட்டரி, கேமரா, சிப்செட் மற்றும் டிசைன் உள்ளிட்ட விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இவற்றை பார்த்துவிட்டு எதிர்பார்க்கப்படும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 9 எச்டி அம்சங்கள் (Infinix Smart 9 HD Specifications): இந்த போனில் மின்ட் கிரீன் (Mint Green), கோரல் கோல்டு (Coral Gold) மற்றும் மெட்டாலிக் பிளாக் (Metalic Black) ஆகிய கலர்கள் வெளியாக இருக்கிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட பம்ப் மற்றும் மெட்டாலிக் லுக் ஃபிரேம் பாடி கொடுக்கிறது. இந்த செக்மெண்டில் டியூரபிலிட்டி கொண்ட மடலாக இருக்கிறது.
ஏனென்றால், IP54 டஸ்ட் & ஸ்பிளாஷ் ப்ஃரூப் மட்டுமல்லாமல், 70 டிகிரி டெம்ப்ரேச்சர் டெஸ்ட் மற்றும் 1.5 மீட்டரில் 6-சைடெட் டிராப் புரொடெக்சன் டெஸ்ட் செய்துள்ளது. 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. பஞ்ச்-ஹோல் டிசைனில் டிஸ்பிளே இருக்கிறது.
ஆகவே, டைனாமிக் பார் (Dynamic Bar) கொடுக்கப்படலாம். டிடிஎஸ் ஆடியோ ப்ராசஸிங் (DTS Audio Processing) கிடைக்கிறது. இந்த சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) இருக்கின்றன. இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 9 எச்டி போனில் டூயல் கேமரா சிஸ்டம் (Dual Camera System) கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் (Secondary Lens) கிடைக்கிறது.
ஜூம் ஃபிளாஷ் லைட் (Zoom Flashlight) சப்போர்ட் கொடுக்கிறது. டூயல் எல்இடி ஃபிளாஷ்லைட் (Dual LED Flashlight) கிடைக்கிறது. இந்த இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 9 எச்டி போனில் 3 ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மீடியாடெக் ஹீலியோ ஜி50 ஆக்டா கோர் (MediaTek Helio G50 Octa Core) சிப்செட் கிடைக்கிறது.
டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) கொடுக்கும் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் 14.5 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் மற்றும் 8.6 மணி நேரங்களுக்கு கேமிங் பேக்கப் பெற்று கொள்ளலாம். மேற்கண்ட டிஸ்பிளே, கேமரா, ரேம், சிப்செட் பீச்சர்களை இன்பினிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால், விலை விவரங்கள் கொடுக்கவில்லை.
இருப்பினும், 3 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.7,000 பட்ஜெட்டுக்குள் இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால், இந்தியாவில் ஏற்கவே விற்பனைக்கு இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி போனின் விலை ரூ.6,699ஆக மட்டுமே இருக்கிறது. ஆகவே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் அப்கிரேட் செய்யப்பட்டு இந்த போனும் அடிமட்ட பட்ஜெட்டிலேயே விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








