Home
Mobile

மார்கெட் காலி.. ரூ.7000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. AI லென்ஸ் வேற.. எந்த மாடல்?

இந்தியாவின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களை கவரும் விதமாக ரூ.7000 பட்ஜெட்டில் 50எம்பி கேமரா, 8 ஜிபி ரேம், 5000mAh போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், மேஜிக் ரிங் பீச்சருடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 (Infinix Smart 8) போன் வெளியாக இருக்கிறது.

இந்த புதிய இன்பினிக்ஸ் மாடலானது, வரும் ஜனவரி 13ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கேமரா, பேட்டரி, ஓஎஸ் மற்றும் கலர் வேரியண்ட்கள் போன்ற முக்கிய அம்சங்கள் வெளியாகி இருக்கின்றன.

ரூ.7000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. AI லென்ஸ் போன்!

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 அம்சங்கள் (Infinix Smart 8 Specifications): இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு ஏஐ லென்ஸ் (AI Lens) இடம் பெற்றுள்ளது. இந்த கேமராவில் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஆர் ஷாட் (AR Shot) போன்ற பீச்சர்கள் வருகின்றன.

அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) சப்போர்ட் வருகிறது. இந்த போனில் 5000mAh பேட்டரி வருகிறது. அதோடு 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner) வருகிறது.

இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 போனில் ரெயின்போ ப்ளூ (Rainbow Blue), ஷைனி கோல்டு (Shiny Gold), டிம்பர் பிளாக் (Timber Black) மற்றும் கேலக்ஸி ஒயிட் (Galaxy White) ஆகிய 4 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. மேஜிக் ரிங் பீச்சர் கொண்டிருக்கிறது. இந்த போன் ரூ.7,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகிறது.

இந்த போனின் குளோபல் வேரியண்ட் ஏற்கனவே வெளியாகிவிட்டதால், அந்த அம்சங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம். இந்த போனில் ஆக்டா கோர் யுனிசோக் டி606 12என்எம் (Octa Core Unisoc T606 12nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போனில் 6.6 இன்ச் எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.இந்த போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் இருக்கிறது.

அதேபோல 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டும் வருகிறது. அதுமட்டுமல்லாமல், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த இன்பினிக்ஸ் மாடலில் டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட சிங்கிள் போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் (Single Ported Speakers) வருகின்றன.

3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. இந்த போனில் பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் வருகிறது. டூயல் நானோ சிம் (Dual Nano SIM) சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கொண்டுள்ளது. டைப்-சி (Type-C) சார்ஜிங் சப்போர்ட் வருகிறது.

இந்த போனின் கனெக்டிவிட்டியை பார்க்கையில் இந்த போனில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) வருகிறது. அதோடு வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கொடுக்கப்பட்டுள்ளன. இதன் பெரும்பாலான அம்சங்கள் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி வேரியண்ட்டை போலவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Smart 8 With Under Rs 7000 To Launch in India on January 13 Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X