Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர்.. வெறும் ரூ.6,749-க்கு.. 8GB ரேம், 2TB ஸ்டோரேஜ், 50MP கேமரா, 5000mAh பேட்டரி.. என்ன மாடல்?

மொத்தம் 8ஜிபி ரேம் (4ஜிபி வழக்கமான ரேம் + 4ஜிபி விர்ச்சுவல் ரேம்) மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 2டிபி வரையிலாக இன்டர்னல் ஸ்டோரேஜ், 50எம்பி மெயின் கேமரா, 5000எம் ஏஎச் பேட்டரி மற்றும் பல அம்சங்கள்.. இதெல்லாம் வெறும் ரூ.6749 க்கு கிடைக்கும் என்று கூறினால்.. உங்களில் சிலர் நம்பாமல் போகலாம்!

ஆனால் அதுதான் உண்மை! இன்பினிக்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 (Infinix Smart 8) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 (Infinix smart 7) மாடலுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வரும் ஒரு அப்கிரேட்ட வெர்ஷன் (Upgraded Version) ஆகும்.

வெறும் ரூ.6,749-க்கு 8GB ரேம்,  2TB ஸ்டோரேஜ், 5000mAh பேட்டரி!

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை: இந்தியாவில் இது சிங்கிள் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டின் அசல் அறிமுக விலை (Original Launch Price) ரூ.7,499 ஆகும்.

ஆனால் ஐசிஐசிஐ வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சலுகையுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனாயோ வெறும் ரூ.6,749 க்கு வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஒயிட் (Galaxy White), ரெயின்போ ப்ளூ (Rainbow Blue), ஷைனி கோல்ட் (Shiny Gold) மற்றும் டிம்பர் பிளாக் (Timber Black) என மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் ஜனவரி 15 முதல் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வரும்.

வெறும் ரூ.6,749-க்கு 8GB ரேம்,  2TB ஸ்டோரேஜ், 5000mAh பேட்டரி!

டூயல் சிம் ஆதரவு (Dual SIM Support) உடன் வரும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 (Android 13) அவுட் ஆஃப் பாக்ஸில் எக்ஸ்ஓஎஸ் 13 ஸ்கின் (XOS 13 Skin) மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனை இயக்குவது ஆக்டா கோர் ஹீலியோ ஜி36 சிப்செட் (Octa-core Helio G36 processor) ஆகும்.

இந்த சிப்செட 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடவே இது 4ஜிபி விர்ச்சுவல் ரேம் (4GB Virtual RAM) ஆதரவையும் கொண்டுள்ளது மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் (Micro SD Card Slot) கொண்டுள்ளது, இதன் கீழ் ஸ்மார்ட்போனின் இன்டர்னல் ஸ்டோரேஜை 2டிபி வரை விரிவாக்க முடியும்.

வெறும் ரூ.6,749-க்கு 8GB ரேம்,  2TB ஸ்டோரேஜ், 5000mAh பேட்டரி!

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது எச்டி பிளஸ் ரெசல்யூஷன் (HD+ Resolution) மற்றும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 90Hz refresh rate) உடனான 6.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே பேனலில் (ஆப்பிள் ஐஃபோன்களில் காணப்படும் டைனமிக் ஐலேண்ட் போன்ற) மேஜிக் ரிங் (Magic Ring) உள்ளது, இது சார்ஜிங் லெவல் மற்றும் லோ பேட்டரி போன்ற செயல்பாடுகளை காட்சிப்படுத்தும்.

கேமராவை பொறுத்தவரை, இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) உள்ளது. அதில் 50எம்பி மெயின் கேமரா மற்றும் இரண்டாம் நிலை ஏஐ லென்ஸ் (Secondary AI lens) உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான பொறுப்பை 8எம்பி செல்பீ கேமரா பாத்துக்கொள்ளும்.

4ஜி எல்டிஐ ஆதரவு (4G LTE Support) உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் (Side-mounted fingerprint sensor) உள்ளது. கடைசியாக இது யூஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-c Port) ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Smart 8 with 8GB RAM 50MP Camera Launched In India Price Specifications Sale from Jan 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X