அரளுது மார்கெட்.. வெறும் ரூ.8,485 போதும்.. 8GB ரேம்.. AI கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் அதிரும்படியான பட்ஜெட்டில் 8ஜிபி ரேம், எச்டிபிளஸ் டிஸ்பிளே, டூயல் கேமரா, 10W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பக்காவான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 (Infinix Smart 8) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 அம்சங்கள் (Infinix Smart 8 Specifications): இந்த போன் 6.6 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் டார்க் ரீஜியன் என்ஹான்ஸ்மெண்ட் (Dark Region Enhancement) டெக்னாலஜி பயன்படுத்தப்படுள்ளது.

ஆகவே, அவுட்டோரில் இந்த டிஸ்பிளே கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் கொடுக்கும். இந்த இன்பினிக்ஸ் போனில் 13 எம்பி டூயல் ஏஐ கேமரா (Dual AI Camera) வருகிறது. அதோடு ரிங் பிளாஷ் லைட் (Ring Flashlight) இடம் பெற்றுள்ளது. இந்த கேமராவில் நேச்சுரல் போர்ட்ராய்டு மோட் (Natural Portrait Mode), எச்டிஆர் மோட் (HDR Mode) போன்றவை வருகின்றன.
அதேபோல 8 எம்பி கிரிஸ்டல் கிளியர் செல்பீ (Crystal Clear Selfie) கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி606 12என்எம் (Octa Core Unisoc T606 12nm) சிப்செட் வருகிறது. அதோடு எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.
இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. அதோடு மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, டூயல் சிம் சிலாட் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் கொண்டிருக்கிறது.

இந்த இன்பினிக்ஸ் மாடலில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியானது, 36 மணி நேர வீடியோ பிளேபேக், 50 மணி நேர மியூசிக் பிளேபேக் மற்றும் 39 மணி நேர காலிங் பேக்கப் டைம் கொடுக்கக்கூடியது. அதோடு அல்ட்ரா பவர் சேவிங் மோட் (Ultra Power Saving Mode) கொண்டுள்ளது.
இந்த மோட் மூலம் வெறும் 5 சதவீதம் மட்டுமே சார்ஜ் இருந்தாலும் கூட 2 மணி நேரங்களுக்கு காலிங் பேக்கப் மற்றும் 24 மணி நேர ஸ்டான்பை டைம் பெற்று கொள்ளலாம். இந்த போனில் வரும் டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் 200 சதவீத ஆடியோ அவுட்புட் கொடுக்கக்கூடியதாகும். சைடு ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Fingerprint) வருகிறது.
அதோடு பேஸ் ஃபாஸ்ட் அன்லாக் (Face Fast Unlock) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் போனில் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack) மற்றும் ஃஎப்எம் ரோடியோ (FM Radio) வருகிறது. இந்த போன் டிம்பர் பிளாக், கேலக்ஸி ஒயிட், கிரிஸ்டல் கிரீன் மற்றும் ஷைனி கோல்டு ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை வெறும் ரூ.8,485ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நைஜீரியாவில் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு வந்துவிட்டது. கம்மியான விலையில் பக்காவான போனாக இருப்பதால், மற்ற நாடுகளில் அதற்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








