ஆளுக்கொரு ஆர்டர்.. வெறும் ரூ.10,000 போதும்.. AI கேமரா.. 5000mAh பேட்டரி.. RING எல்இடி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் மலிவு விலை போன்களுக்கான வரவேற்பை அறிந்த இன்பினிக்ஸ் நிறுவனம் ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சீரிஸ் (Infinix Smart 8 Series) மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நேரத்தில் அவற்றின் வெளியீடு மற்றும் அம்சங்களை பார்ப்போம்.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 அம்சங்கள் (Infinix Smart 8 Specifications): இந்த போனில் ஆக்டா கோர் யுனிசோக் டி606 12என்எம் (Octa Core Unisoc T606 12nm) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) சப்போர்ட் உள்ளது. மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் போனில் 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இதுவொரு டூயல் ஏஐ கேமரா (Dual AI Camera) சிஸ்டமாகும்.
இந்த கேமராவில் நேச்சுரல் போர்ட்ராய்டு (Natural Portrait), எச்டிஆர் (HDR) போன்ற மோட்கள் வருகின்றன. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாடலில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி டைனாமிக் ரேம் சப்போர்ட் வருகிறது. அதோடு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner) வருகிறது.

இந்த இன்பினிக்ஸ் போனில் டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட சிங்கிள் போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. அதேபோல பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் வருகிறது. இந்த இன்பினிக்ஸ் போனில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் வருகிறது. இந்த மாடலில் டிம்பர் பிளாக், கிரிஸ்டல் கிரீன், கேலக்ஸி ஒயிட் மற்றும் ஷைனி கோல்டு ஆகிய 4 கலர்கள் இருக்கின்றன.
இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 போன் நைஜீரியாவில் விற்பனைக்கு வந்து, மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அங்கு, இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,485ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் டிசம்பர் 8ஆம் தேதி இந்த மாடல் வெளியாகிறது.
நைஜீரியாவை போலவே இங்கும் இந்த போனின் விலை ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. முன்னதாக, இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் 8 சீரிஸ் போன்கள் விரைவில் வெளியாகும் என்று டீசர் ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆகவே, இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 மாடலோடு ப்ரோ அல்லது எச்டி மாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் கீக்பெஞ்ச் (GeekBench), ப்ளூடூத் எஸ்ஐஜி (Bluetooth SIG) மற்றும் ஈஈசி (EEC) தளங்களில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ப்ரோ (Infinix Smart 8 Pro) இடம்பெற்றுள்ளது. அதோடு இந்த போனில் மீடியாடெக் ஹீலியோ பி35 (MediaTek Helio P35) சிப்செட், ஆண்ட்ராய்டு 13, 4 ஜிபி ரேம் போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








