Home
Mobile

கம்பெனிக்கு கட்டுமா சார்.. ரூ.7000 போதும்.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. எந்த போன்?

இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனை நைஜீரியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இதே இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 போன் ஆனது விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதாவது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 போன் ஆனது இந்தியாவில் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 போன் ரூ.7000-க்கு கீழ் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

கம்பெனிக்கு கட்டுமா சார்.. ரூ.7000 போதும்.. 50எம்பி கேமரா.. எந்த போன்?

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 அம்சங்கள் (Infinix Smart 8 specifications): 6.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும். இதன் டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

யுனிசாக் டி606 (Unisoc T606 SoC) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 மாடல். அதேபோல் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPu) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Android 13 Go Edition) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 போன் இந்தியாவுக்கு வரும். ஆனாலும் இந்த போனுக்கு பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன். 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மறறும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

கம்பெனிக்கு கட்டுமா சார்.. ரூ.7000 போதும்.. 50எம்பி கேமரா.. எந்த போன்?

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor)கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 மாடல்.

வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன். டிம்பர் பிளாக், ஷைனி கோல்ட், கிரிஸ்டல் கிரீன் மற்றும் கேலக்ஸி ஒயிட் நிறங்களில் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Smart 8 with 50MP camera will be launched in India soon: check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X