வாரி தூக்கும் பட்ஜெட்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. வருகிறது புது இன்பினிக்ஸ் போன்.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தரமான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. இந்த ஆண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.
அதாவது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 (Infinix Smart 8) எனும் ஸ்மார்ட்போனை தான் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கூகுள் பிளே கன்சோல் (Google Play Console) தளத்தில் இந்த போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் கசிந்துள்ளது.

அதன்படி இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் ஆனது எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 720 × 1612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
குறிப்பாக இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனில் Spreadtrum T606 சிப்செட் உடன் மாலி-ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்ப அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பலவேறு கேமரா அம்சங்கள் உள்ளன.
10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (10W fast charging support) கொண்ட 5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு கைரேகை ஸ்கேனர் வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் தரமான வடிவமைப்புடன் அறிமுகமாகும் என நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி எல்இடி (4G LTE) ஆதரவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த போன் ரூ.10,000 அல்லது ரூ.12,000 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








