டீசர் வெளியானது.. கம்மி விலை.. டூயல் கேமரா.. 5000mAh பேட்டரி.. 8ஜிபி ரேம்.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சீரிஸ் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. அதாவது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 (Infinix Smart 8) மற்றும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) ஸ்மார்ட்போன்கள் தான் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் ஆனது நைஜீரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 மற்றும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி போன்கள் தரமான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் இப்போது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 6.6 இன்ச் எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளே வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 போன் அறிமுகமாகும். பின்பு 720 x 1612 பிக்சல்ஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனின் டிஸ்பிளேவில் உள்ளது.
குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளேவில் டார்க் ரீஜியன் என்ஹான்ஸ்மெண்ட் (Dark Region Enhancement)டெக்னாலஜி பயன்படுத்தப்படுள்ளது. இது அவுட்டோரில் இந்த டிஸ்பிளே கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளேவுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.
13எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 . குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ரிங் பிளாஷ் லைட் (Ring Flashlight) மற்றும் நேச்சுரல் போர்ட்ராய்டு மோட் (Natural Portrait Mode), எச்டிஆர் மோட் (HDR Mode) போன்ற பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனில் உள்ளன. 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128ஜிபி ஸடோரேஜ் வசதியுடன் இந்த அசத்தலான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
ஆக்டா கோர் யுனிசோக் டி606 12என்எம் (Octa Core Unisoc T606 12nm) சிப்செட் வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்..

இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். பின்பு 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, சைடு ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Fingerprint) உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 வெளிவரும்.
வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack), ஃஎப்எம் ரோடியோ (FM Radio), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறுகனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன். மேலும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 மற்றும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி போன்கள் கம்மி விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








