என்ன Phone-டா சாமி இது.. 2TB ஸ்டோரேஜ், 5000mAh பேட்டரி, 6.6-இன்ச் டிஸ்பிளே.. 50MP கேமரா.. என்ன மாடல்?
பட்ஜெட்-விலை பிரிவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக்கொண்டே வரும் இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனமானது சத்தமின்றி ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதென்ன மாடல்? அதன் விலை நிர்ணயம் என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? 50 மெகாபிக்சல் ரியர் கேமரா, 6.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம், ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன், 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்? டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன்(Android 13 Go Edition) கொண்டு இயங்குகிறது. இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) மற்றும் 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (Peak Brightness) உடனான 6.66-இன்ச் எச்டி பிளஸ் (720x1612 பிக்சல்ஸ்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மீடியாடெக் ஹீலியோ ஜி36 (Mediatek Helio G36) சிப்செட் மூலம் இயக்கப்படும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 8ஜிபி வரையிலான LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (Micro SD Card Slot) வழியாக 2டிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவுடன் 128ஜிபி வரையிலான இன்பில்ட் ஸ்டோரேஜ் உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ப்ரோவில் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) உள்ளது. அதில் எப்/1.85 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + டெப்த் இன்ஃபர்மேஷனை (Depth Information) சேகரிக்க பயன்படும் எப்/2.0 அபெர்க்ஷர் உடனான பெயர் குறிப்பிடப்படாத ஏஐ லென்ஸும் (AI Lens) உள்ளது. முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
கனெக்டிவிட்டி (Connectivity) ஆப்ஷன்களை பொறுத்தவரை, இதில் 4ஜி எல்டிஇ, வைஃபை 5, ப்ளூடூத் 5, யூஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C) மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. சென்சார்களை பொறுத்தவரை, கைரோஸ்கோப், இ-காம்பஸ், ஆக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவைகள் உள்ளன.

மேலும் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) பொருத்தப்பட்டுள்ளது. கடைசியாக இது 10W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. அளவீட்டில் 163.60x75.60x8.5 மிமீ மற்றும் எடையில் 189 கிராம் உள்ளது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: தற்போது வரையிலாக இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் ஸ்மார்ட் 8 ப்ரோ விலையை வெளியிடவில்லை. இன்பினிக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போனின் விவரங்களின்படி, இது 4ஜிபி அல்லது 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி அல்லது 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வாங்க கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் - கேலக்ஸி ஒயிட், ரெயின்போ ப்ளூ, ஷைனி கோல்ட் மற்றும் டிம்பர் பிளாக் என மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும். இன்னும் சில தினங்களில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் பற்றி அறிவிக்கப்படலாம். அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications








