Home
Mobile

சத்தியமா இது ரூ.10,000-ஆ! Magic Ring டிஸ்பிளே, 200% சூப்பர் வால்யூம், 8GB ரேம், 5000mAh பேட்டரி.. என்ன மாடல்?

சத்தியமாக இந்த ஸ்மார்ட்போனின் பட்ஜெட் ரூ.10000 தானா? என்று கேட்கவைக்கும் படியான ஒரு புதிய ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதென்ன மாடல்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? சரியாக என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ப்ரோ (Infinix Smart 8 Pro) ஸ்மார்ட்போனை பற்றித்தான்! இது கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனின் ப்ரோ வெர்ஷனாக (Pro Version) இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சத்தியமா இது ரூ.10,000-ஆ! Infinix-ன் அடுத்த போன் அறிமுகத்திற்கு ரெடி!

அதாவது ப்ரோ மாடலானது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8-ல் உள்ள சில முக்கிய அம்சங்களோடு சேர்த்து "விலைக்கு ஏற்ப" கூடுதலாக சில அம்சங்களை பேக் செய்யும். சமீபத்தில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி என்கிற மாடலும் இந்தியாவில் அறிமுகமானது. ஆக ப்ரோ மாடலில் இவ்விரு மாடல்களில் இருந்து "கலவையான"அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? கூகுள் பிளே கன்சோல் லிஸ்டிங் வழியாக கிடைத்த தகவல்களின்படி, இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் இமேஜினேஷன் பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு (Imagination PowerVR GE8320 GPU) உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட்டுடன் (Octa-core MediaTek Helio P35 chipset) வரும்.

சத்தியமா இது ரூ.10,000-ஆ! Infinix-ன் அடுத்த போன் அறிமுகத்திற்கு ரெடி!

மேலும் இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 13 உடன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 720 x 1612 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 320 டிபிஐ ஸ்க்ரீன் டென்சிட்டி உடனான 6.6-இன்ச் டிஸ்பிளே இடம்பெறலாம். இதன் டிஸ்பிளேவில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி மாடலில் உள்ள மேஜிக் ரிங் அம்சமும் இடம்பெறலாம்.

மேஜிக் ரிங் என்பது ஆப்பிள் ஐபோன்களில் நாம் காணும் டைனமிக் ஐலேண்ட் அம்சத்தை போன்ற ஒரு இன்டராக்டிவ் பஞ்ச்-ஹோல் ஸ்கிரீன் ஆகும். செல்பீ கேமராவில் இருந்து வலது மற்றும் இடது புறமாக விரிவடையும் இந்த ஸ்க்ரீனில் சார்ஜிங் ஸ்டேட்டஸ் உட்பட பல நோட்டிபிகேஷன்களை ரியல்-டைம் தகவல்களை பார்க்க முடியும்.

சத்தியமா இது ரூ.10,000-ஆ! Infinix-ன் அடுத்த போன் அறிமுகத்திற்கு ரெடி!

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனில் உள்ள எக்ஸ்டென்டட் ரேம் டெக்னாலஜியை (Extended RAM technology) ப்ரோ மாடலிலும் நாம் எதிர்பார்க்கலாம். இதன் கீழ் 4ஜிபி வழக்கமான ரேம் + 4ஜிபி விர்ச்சுவல் ரேம் என மொத்தம் 8ஜிபி அளவிலான ரேம் கிடைக்கும்.

இதேபோல 200% சூப்பர் வால்யூம் அம்சமும் இதில் இடம்பெறலாம். அதாவது உங்களுக்கு 100% வால்யூம் போதுமானதாக இல்லாதபோது, ​​அதிகபட்ச ஒலியளவை 200% வரை கொண்டு செல்லும் அம்சம் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ப்ரோ மாடலிலும் இடம்பெறலாம். இது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 மாடலின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இதுதவிர்த்து 5000mAh பேட்டரி, 13 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட்டையும் நாமம் எதிர்பார்க்கலாம்.

சத்தியமா இது ரூ.10,000-ஆ! Infinix-ன் அடுத்த போன் அறிமுகத்திற்கு ரெடி!

என்ன விலைக்கு வரும்? இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 மற்றும் இந்தியாவில் அறிமுகமான இன்பினிஸ் ஸ்மார்ட் 8 எச்டி ஆகிய இரண்டுமே ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகி உள்ளன. குறிப்பாக ஸ்மார்ட் 8 எச்டி ஸ்மார்ட்போனின் பேஸிக் 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் பிளிப்கார்ட் வழியாக வெறும் ரூ.6,299 க்கு வாங்க கிடைக்கிறது

ஆக எப்படி பார்த்தாலும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ப்ரோ மாடலின் விலை ரூ.10,000 பட்ஜெட்டை சுற்றித்தான் இருக்கும். சீன நிறுவனங்கள் ரூ,.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஆக 4ஜி ஆதரவுடன் வரும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ப்ரோ பெரும்பாலும் ரூ.10,000 க்குள் என்கிற விலை நிர்ணயத்தையே பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Smart 8 Pro Launch Soon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X