நாளைக்கு லான்ச் ஆகும் புதிய இன்பினிக்ஸ் போன்.. ரூ.7000 போதும்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் (Infinix Smart 8 Plus) ஸ்மார்ட்போனை இந்தியாவில் நாளை (மார்ச் 1) அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் அம்சங்கள் (Infinix Smart 8 Plus specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு720 x 1612 பிக்சல்கள், 90Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate), 500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் போனில் தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி36 எஸ்ஒசி (MediaTek Helio G36 SoC) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 ( கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.
50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா + AI லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு இது குவாட் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸமார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும்.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் போன் அறிமுகமாகும்.
டிடிஎஸ் ஆடியோ சப்போர்ட் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் ஷைனி கோல்ட், கேலக்ஸி ஒயிட் மற்றும் டிம்பர் பிளாக் நிறங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
குறிப்பாக இந்த புதிய இன்பினிக்ஸ் போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.7,000 பட்ஜெட்டில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் போன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications