அதகளம் பண்ணும் இன்பினிக்ஸ்.. கம்மி பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. மார்ச்.1-ல் வரும் புதிய போன்..
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் (Infinix Smart 8 Plus) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போனின் அறிமுக தேதி வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வரும் மார்ச் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போனின் அறிமுக தேதி பிளிப்கார்ட் (Flipkart) மைக்ரோசைட் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் அம்சங்கள் ( Infinix Smart 8 Plus specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு720 x 1612 பிக்சல்கள், 90Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate), 500 nits வரை பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா + AI லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு இது குவாட் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸமார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் போன் அறிமுகமாகும்.
குறிப்பாக இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் போனில் தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி36 எஸ்ஒசி (MediaTek Helio G36 SoC) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.
அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
இந்தியாவில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,000-க்கு கீழ் தான் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த இன்பினிக்ஸ் போன்.


Click it and Unblock the Notifications