Home
Mobile

தூள் கிளப்பிய இன்பினிக்ஸ்.. ரூ.6,999 போதும்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் (Infinix Smart 8 Plus) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் போன்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் அம்சங்கள்: 6.6-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு720 x 1612 பிக்சல்கள், 90Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate), 500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

தூள் கிளப்பிய இன்பினிக்ஸ்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி36 எஸ்ஒசி (MediaTek Helio G36 SoC) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 ( கோ எடிஷன்) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா + AI லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு இது குவாட் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸமார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் போன் அறிமுகமாகும். இதுதவிர லைட் சென்சார், பிராக்சிமிடி சென்சார், கைரோஸ்கோப் உள்ளிட்ட பல்வேறு சென்சார் வசதிகள் இந்த போனில் உள்ளன.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிடிஎஸ் ஆடியோ சப்போர்ட் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் ஷைனி கோல்ட், கேலக்ஸி ஒயிட் மற்றும் டிம்பர் பிளாக் நிறங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளது. வரும் மார்ச் 9-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் போனின் விலை ரூ.7,799-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கிகார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.800 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த போனை ரூ.6,999 இருந்தால் வாங்கிவிட முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Smart 8 Plus Launched in India at price of Rs.6999: check specifications, sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X