Home
Mobile

ஆர்டர் அதிரும்.. வெறும் ரூ.7000 பட்ஜெட்ல 8GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

வெறும் ரூ.7000 பட்ஜெட்டில் 8ஜிபி ரேம், 1டிபி மெமரி, 5000mAh பேட்டரி போன்ற பக்காவான அம்சங்கள் மட்டுமல்லாமல், ஐபோன்களில் வரும் டைனாமிக் ஐலேண்ட் (Dynamic Island) போன்ற மேஜிக் ரிங் அம்சத்தோடு இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8எச்டி (Infinix Smart 8 HD) போன் வெளியாகிறது.

இன்பினிக்ஸ் நிறுவனம் மலிவான விலையில் மிரளவிடும் அம்சங்களை கொண்ட போன்களை தொடர்ந்து களமிறக்கி தனக்கென தனி மார்கெட்டை உருவாக்கி வருகிறது. அந்த வரிசையில், ஐபோன்களின் வரும் டைனாமிக் ஐலேண்ட் அம்சத்தை பேஸ் அன்லாக் சப்போர்ட்டுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8எச்டி போனில் கொடுக்க இருக்கிறது.

ரூ.7000 பட்ஜெட்ல 8GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த அம்சத்துக்கு மேஜிக் ரிங் (Magic Ring) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் வியக்க வைக்கும் விஷயம் என்னவென்றால், இந்த போன் வெறும் ரூ.7000 பட்ஜெட்டில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. இந்த போன் ஏற்கனவே நைஜீரியாவில் வெளியாகிவிட்டது. அங்கு இந்த போனின் விலை ரூ.8,485ஆக இருக்கிறது.

இந்த மேஜிக் ரிங் அம்சம் மூலம் பேஸ் அன்லாக், கால் மற்றும் சார்ஜிங் அனிமேஷன் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். இந்த அம்சமே பட்டையை கிளப்பினாலும், அதன் மற்ற அம்சங்கள் மேலும் வியக்க வைக்கின்றன. இந்த போன் இந்தியாவில் எப்போது வெளியாகிறது? அதன் முழு அம்சங்கள் என்ன? உள்ளிட்ட விவரம் பின்வருமாறு.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி அம்சங்கள் (Infinix Smart 8 HD Specifications): இந்த போனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.6 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வருகிறது. 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்டிருக்கிறது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) வருகிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.7000 பட்ஜெட்ல 8GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது. இந்த போனில் ஆக்டா கோர் யுனிசோக் டி606 12என்எம் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது. அதோடு மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

சிங்கிள் போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் வருகிறது. அதோடு டிடிஎஸ் (DTS) ஆடியோ சப்போர்ட் வருகிறது. இந்த போனில் கிரிஸ்டல் கிரீன், கேலக்ஸி ஒயிட், டிம்பர் பிளாக் மற்றும் ஷைனி கோல்டு ஆகிய 4 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்தியாவில் வரும் டிசம்பர் 8ஆம் தேதி இந்த மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த விலையில் இதுபோன்ற அம்சங்கள் கிடைப்பது இதுவே முதல்முறையாகும். ஏற்கனவே, இதுபோன்ற டைனாமிக் ஐலேண்ட் அம்சத்துடன் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி55 போன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், அந்த போனின் விலை ரூ.10,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், இந்த போனுக்கான வரவேற்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix Smart 8 HD With 8GB RAM, 5000mAh Battery Launch Under Rs 10000 in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X