நிறைய பேர் வெயிட்டிங்.. 6.6-இன்ச் டிஸ்பிளே.. 8GB ரேம்.. டிச.8-ல் இந்தியாவுக்கு வரும் Infinix போன்..
இன்பினிக்ஸ் கடந்த சில மாதங்களில் பல்வேறு அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் ஒருெஅசத்தலான போனை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.
அதாவது வரும் டிசம்பர் 8-ம் தேதி இந்தியாவில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் நைஜீரியாவில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 போன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி போன் வெளிவரும்.

இப்போது ஆன்லைனில் கசிந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதன்படி 6.6 இன்ச் எச்டி (HD+) பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி போன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு 720 x 1612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
அதேபோல் இந்த போனின் டிஸ்பிளேவில் டார்க் ரீஜியன் என்ஹான்ஸ்மெண்ட் (Dark Region Enhancement) டெக்னாலஜி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அவுட்டோரில் டிஸ்பிளேவின் கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128ஜிபி ஸடோரேஜ் வசதியுடன் இந்த அசத்தலான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ஆக்டா கோர் யுனிசோக் டி606 12என்எம் (Octa Core Unisoc T606 12nm) சிப்செட் வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட் செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அசத்தலான போன் வெளிவரும். அதேபோல் கிரிஸ்டல் கிரீன் (Crystal Green), ஷைனி கோல்ட் (Shiny Gold), டிம்பர் பிளாக் (Timber Black) மற்றும் கேலக்ஸி ஒயிட் (Galaxy White) நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும்.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். பின்பு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, சைடு ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Fingerprint) உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி போன் அறிமுகமாகும்.
வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் (Headphone Jack), ஃஎப்எம் ரோடியோ (FM Radio), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பாக அம்சங்கள் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி போனில் உள்ளது. மேலும் இந்த போன் ரூ.8,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications