Home
Mobile

மிரளுது மார்கெட்.. வெறும் ரூ.5,669 பட்ஜெட்ல 6GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஐபோன்களில் வரும் டைனாமிக் ஐலேண்ட் போன்ற பிரத்யேக பீச்சர் மட்டுமல்லாமல், 6ஜிபி ரேம், 2டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி, ஏஐ கேமரா போன்ற அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) போன் விற்பனைக்கு வந்துள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி அம்சங்கள் (Infinix Smart 8 HD Specifications): இந்த ஸ்மார்ட் போனில் 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

 ரூ.5,669 பட்ஜெட்ல 6GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்த போனில் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி606 12என்எம் (Octa Core Unisoc T606 12nm) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி போனில் 3 ஜிபி ரேம் + 3 ஜிபி டைனாமிக் ரேம் வருகிறது. ஆகவே, 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, சிம் கார்டு சிலாட்டுடன் எஸ்டி கார்டு சிலாட்டும் வருகிறது. இந்த இன்பினிக்ஸ் மாடலில் ஏஐ லென்ஸ் கொண்ட டூயல் கேமரா செட்டப் வருகிறது. அந்த வகையில், 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு குவாட் எல்இடி ரிங் பிளாஷ் (Quad LED Ring Flash) வருகிறது.

அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த மெயின் கேமராவில் போர்ட்ராய்டு (Portrait), எச்டிஆர் (HDR) போன்ற பீச்சர்கள் வருகின்றன. இந்த போனில் டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Fingerprint Scanner) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் வருகிறது.

 ரூ.5,669 பட்ஜெட்ல 6GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட சிங்கிள் போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. 3.5 மிமீ ஆடியோ ஜாக் வருகிறது. 184 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த போனில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி போனில் டிம்பர் பிளாக் (Timber Black), கிரிஸ்டல் கிரீன் (Crystal Green), கேலக்ஸி ஒயிட் (Galaxy White) மற்றும் ஷைனி கோல்டு (Shinny Gold) ஆகிய 4 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போனில் மேஜிக் ரிங் பீச்சர் வருகிறது. இதன் மூலம் பேஸ் அன்லாக், சார்ஜிங் அனிமேஷன், லோவ் பேட்டரி உள்ளிட்ட நோட்டிபிகேஷன்களை தெரிந்துகொள்ளலாம்.

இந்த போனின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.6,299ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.630 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை ரூ.5,669க்கு வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix SMART 8 HD Under Rs 7000 With Discount in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X