Home
Mobile

யார் சொன்னது? கம்மி விலை போன் நல்லா இருக்காதுனு! இந்த Mobile-ல பாருங்க! உங்க முடிவு மாறிடும்!

ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் இப்போது இந்தியாவை தான் முக்கிய வியாபார நாடாக கருதுகின்றன. அதிலும், பட்ஜெட் போன்களின் சந்தையாக இந்தியா தான் திகழ்கிறது. இதை அறிந்த மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இப்பொழுது மலிவு விலை போன்களை இந்தியாவில் தொடர்ந்து களமிறக்கி வருகின்றன.

அந்த வரிசையில், இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் இப்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிதாக இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 (Infinix Smart 7) என்ற புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த சாதனம் யூனிசாக் SC9863A1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது Redmi A1, POCO C50 மற்றும் Tecno Pop 7 Pro போன்றவற்றுடன் நேரடியாக போட்டியிடுகிறது.

யார் சொன்னது? கம்மி விலை போன் நல்லா இருக்காதுனு! இந்த Mobile-ல பாருங்க

Infinix Smart 7 ஸ்மார்ட்போனின் சிறப்பு என்ன? சிறப்பம்சங்கள் என்ன?

Infinix Smart 7 ஆனது தரமான டிஸ்பிளேவுடன், 6000mAh கொண்ட பெரிய பேட்டரி உடன், 13MP பின்புற கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமராவுடன் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்புறத்தில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது. Infinix இன் இந்த நுழைவு-நிலை ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளது என்று இப்போது பார்க்கலாம் வாங்க.

Infinix Smart 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசுகையில், இது 6.6' இன்ச் IPS LCD கொண்ட HD+ உடன் கூடிய 1612 × 720 பிக்சல் கொண்ட 60Hz ரெப்ரெஷ் ரேட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 500nits உச்ச பீக் பிரைட்டினஸ் உடன் வருகிறது. இந்த போனில் டிஸ்பிளே பேனல் ஒரு வாட்டர் டிராப் நாட்ச் உடன் வருகிறது. இது Unisoc SC9863A1 சிப்செட் உடன் PowerVR GPU உள்ளது.

இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனில் விர்ச்சுவல் ரேம் அம்சமும் உள்ளது, இதன் மூலம் உங்களுக்கு கூடுதலாக 3ஜிபி ரேம் எக்ஸ்ட்ரா கிடைக்கிறது. இந்த டிவைஸ் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்ட XOS 12 இயங்குதளத்தில் இயங்குகிறது. இதன் பின்புறத்தில், 13MP பிரைமரி ஷூட்டரை உள்ளடக்கிய டூயல் கேமரா அம்சத்தைக் கொண்டுள்ளது.

யார் சொன்னது? கம்மி விலை போன் நல்லா இருக்காதுனு! இந்த Mobile-ல பாருங்க

Infinix Smart 7 போனின் விலை என்ன? மலிவு விலையில் இது பெஸ்ட்டா?

இது 2MP செகண்டரி சென்சார் மற்றும் டூயல் எல்இடி ஃபிளாஷ் செட்டப் உடன் வருகிறது. இதன் முன்பக்கத்தில், 5MP செல்ஃபி ஷூட்டர் மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆகியவை இடம்பெறுகிறது. இது 6000mAh பேட்டரியை பேக் செய்கிறது. USB Type-C போர்ட் மூலம் 10W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. இது கைரேகை ஸ்கேனரை கொண்டுள்ளது மற்றும் ஃபேஸ் அன்லாக்கை ஆதரிக்கிறது.

Infinix Smart 7 ஆனது Azure Blue, Emerald Green மற்றும் Night Black ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களில் டூயல் சிம், 4ஜி, வைஃபை 802.11 பி/ஜி/என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ் மற்றும் பெய்டூ ஆகியவை அடங்கும். இதன் விலை பற்றி பார்க்கையில், Infinix Smart 7 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி வேரியண்ட் மாடல் ரூ.7,299 விலையில் வருகிறது.

இது பிப்ரவரி 27 முதல், ஃப்ளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாக வாங்குவதற்கு கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Infinix Smart 7 Launched in India At Rs 7299 Can Be Purchased Via Flipkart From February 27
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X