Home
Mobile

ஓடியாங்க, ஓடியாங்க.. மலிவு விலையில் அறிமுகமானது புதிய Infinix போன்.! என்னென்ன அம்சங்கள்.!

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் கம்மி விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது இன்பினிக்ஸ் நிறுவனம். மேலும் இந்நிறுவனம் 5ஜி போன்களை அதிகம் அறிமுகம் செய்யவில்லை என்றால், இதன் 4ஜி போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அதாவது குறைந்த விலையில் ஒரு நல்ல 4ஜி போன்களை வாங்க நினைக்கும் பயனர்கள், இந்நிறுவனத்தின் 4ஜி போன்களை வாங்குவது மிகவும் நல்லது. இந்நிலையில் இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய Infinix Smart 7 HD (இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டி) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

மலிவு விலையில் அறிமுகமானது புதிய Infinix போன்.! என்னென்ன அம்சங்கள்

இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டி ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1612 x 720 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டி ஸ்மார்ட்போனில் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் Unisoc எஸ்சி98631ஏ1 பிராசஸர் உடன் ஐஎம்ஜி8322 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எக்ஸ்ஒஎஸ் 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக 2ஜிபி ரேம் ( + 2ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

8எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி ரியர் கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மலிவு விலையில் அறிமுகமானது புதிய Infinix போன்.! என்னென்ன அம்சங்கள்

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டி போனின் விலை ரூ.5,999-ஆக உள்ளது. பின்பு இன்க் பிளாக்,சில்க் ப்ளூ, ஜேட் ஒயிட் மற்றும் கிரீன் ஆப்பிள் நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

வரும் மே 4-ம் தேதி இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.600 தள்ளுபடி கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Infinix SMART 7 HD phone has been launched in India at price of Rs 5,999: check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X