சூப்பரான அம்சங்களுடன் களமிறங்கும் Infinix Smart 6 Plus.! எப்போது அறிமுகம் தெரியுமா?
இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ் ( Infinix Smart 6 Plus) எனும் ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜூலை 29-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ்
இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களில் கம்மி விலையில் ஸ்மார்ட்போன், டிவி மற்றும் லேப்டாப் என பல சாதனங்களை அறிமுகம் செய்துவிட்டது. அதபோல் இந்நிறுவனம் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன்களையும் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது.
குறிப்பாக சியோமி, ரியல்மி நிறுவனங்களுக்கு போட்டிக்கொடுக்கும் வகையில் தான் கம்மி விலையில் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது இன்பினிக்ஸ். அந்த வகையில் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலும் கம்மி விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்
ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி ஜூலை 29-ம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் இந்த இன்பினிக்ஸ் ஸ்மாரட் 6 பிளஸ் ஸ்மார்ட்போன்அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாம் எதிர்பார்த்த சில முக்கிய அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

பெரிய டிஸ்பிளே
புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது பெரிய டிஸ்பிளேவுடன் தான் வெளிவரும். அதாவது இந்தபோன் 6.82-இன்ச் வாட்டர் டிராப் நாட்ச்டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும். குறிப்பாக 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்.

சிப்செட் எப்படி?
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் சிப்செட் வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
குறிப்பாக இந்த போனில் மீடியாடெக் சிப்செட் இருப்பதை விட ஸ்னாப்டிராகன் சிப்செட் இடம்பெற்றால் இன்னும் அருமையாக இருக்கும்.

பேட்டரி வசதி
இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், டூயல் ரியர் கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்தபுதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
கண்டிப்பாக இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருக்கும். அதேபோல் இப்போதே ஒரு நல்ல இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் வேண்டும் என்றால் இந்த இன்பினிக்ஸ்நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனை தேர்வு செய்யுங்கள். அதாவது இந்த போன்
அருமையான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்ட இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் ஸ்னோஃபால் ஒயிட் மற்றும் ஃபோர்ஸ் பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி டிஸ்பிளே
இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி AMOLED வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்ஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்,20:9 ரேஷியோ போன்ற அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போன்.
குறிப்பாக இந்த 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும். மேலும் XOS 10.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி.

கேமரா மற்றும் பேட்டரி
இந்த இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி போன் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் லென்ஸ் + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு 33W பாஸ்ட் சார்ஜிங், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி போன்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








