Home
Mobile

அசத்தலான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பற்றிய தகவல் வெளிவரவில்லை.இப்போது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மர்ரட்போனின் விலை ரூ.9,000-என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கருப்பு,நீலம் பச்சை நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போனில் 6.6-

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போனில் 6.6-இன்ச் எச்டி பிளஸ் ஐபிடிஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ர்ட் 6 மாடலில் தனித்துவமான

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 மாடலில் தனித்துவமான UNISOC SC9863A சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மிக அருமையாக செயல்படும் என்றே கூறலாம். மேலும் XOS 7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6மாடல். அதேபோல் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கூட கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 6 ஸ்மார்ட்போனின்

இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி பிரைமரி கேமரா + ஏஐ சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர தனித்துவான கேமரா அம்சங்களும் இவற்றுள் அடக்கம்.

ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போனில் 2ஜிபி

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ர்ட் 6 ஸ்மார்ட்போனில் 5000

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ல் 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை,

அதேபோல் 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ஸ்மார்ட்போன் மாடல். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன்இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் இதற்கு முன்பு இன்பினிக்ஸ் நோட் 11,இன்பினிக்ஸ் நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
Infinix Smart 6 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X