இந்தியாவில் பிப்ரவரி 11ல் அறிமுகமாகும் Infinix Smart 5.. விலை ரூ.8,000-க்கும் கம்மியா?

|

பிப்ரவரி 11 ஆம் தேதி இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் பிரத்தியேகமாகக் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இத்துடன், இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை 8,000-க்கு கீழ் தான் இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதனால் இந்த போனிற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5

புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5

மொராண்டி கிரீன், 6 டிகிரி பர்பில், ஏஜியன் ப்ளூ மற்றும் அப்சிடியன் பிளாக் ஆகிய நான்கு வண்ண வகைகளில் இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் வரும் பிப்ரவரி 7 முதல் பிளிப்கார்ட்டின் வலைப்பக்கத்தில் விற்பனைக்கு முன்பு எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்படும்.

டிஸ்பிளே மற்றும் ஸ்டோரேஜ் விபரம்

டிஸ்பிளே மற்றும் ஸ்டோரேஜ் விபரம்

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நைஜீரியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, இந்த போன் 3 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 6.6' இன்ச் 720x1600 பிக்சல்கள் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பகத்துடன் குறிப்பிடப்படாத 1.8 ஜிகாஹெர்ட்ஸ் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

இனி 'இந்த' ATM இயந்திரங்களில் பணம் எடுக்க தடை.. குழப்பத்திலும், கடுப்பிலும் வாடிக்கையாளர்கள்..இனி 'இந்த' ATM இயந்திரங்களில் பணம் எடுக்க தடை.. குழப்பத்திலும், கடுப்பிலும் வாடிக்கையாளர்கள்..

கேமரா விபரம்

கேமரா விபரம்

இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 சாதனத்தில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் அம்சமும் உள்ளது, இதன் வழியாக 256 ஜிபி வரை உங்கள் ஸ்டோரேஜை விரிவாக்கிக்கொள்ளலாம். கேமராவைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் இரண்டு கியூவிஜிஏ சென்சார்கள் உள்ளன. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்ஃபி சென்சாருடன் வருகிறது.

பேட்டரி விபரம்

பேட்டரி விபரம்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன், 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் கூடிய 10W சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கிறது. இது Android 10 Go பதிப்பில் இயங்குகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் இணைப்பு அம்சங்களை பொறுத்தவரையில், இதில் 4 ஜி ஆதரவு, டூயல் பேண்ட் வைஃபை ஏசி, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றுடன் வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Infinix Smart 5 Smartphone Will Be Launching On February 11 In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X