Home
Mobile

இன்று விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன்.!

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்று மிகவும் எதிர்பார்த்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போனின் விலை
ரூ.7,199-ஆக உள்ளது.

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

மேலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.4000 மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் குறப்பிட்ட கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு
அம்சங்களைப் பார்ப்போம்.

720x1640 பிக்சல் தீர்மானம்

720x1640 பிக்சல் தீர்மானம்

ஏஜியன் ப்ளூ, மொராண்டி கிரீன், அப்சிடியன் பிளாக் உள்ளிட்ட சில நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் 720x1640 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:5:9 என்ற திரைவிகிதம், 440nits பிரைட்நஸ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஹீலியோ ஜி25 ஆக்டோ-கோர்

ஹீலியோ ஜி25 ஆக்டோ-கோர்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஹீலியோ ஜி25 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலம் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

டூயல் கேமரா

டூயல் கேமரா

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி ஏஐ டூயல் கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் குவாட் எல்இடி பிளாஸ் ஆதரவு மற்றும் லோ லைட் சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 8எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு

அதேபோல் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஏஐ ஸ்மார்ட் பவர் சேமிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் சார்ஜ் பற்றிய கவலை இருக்கவே இருக்காது.

மேலும் 4 ஜி ஆதரவு வைஃபை ஏசி, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த புதிய ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Infinix Smart 5 Sale Starts Today in India: Price, Offers and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X