6000 எம்ஏஎச் பேட்டரியோடு இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4: விலை ரூ.6,999 மட்டுமே!

|

இன்பினிக்ஸ் தனது புதிய மாடலான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 ஸ்மார்ட்போனை நவம்பர் 8 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் விலை ரூ.6,999 ஆக நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் புதிய ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் புதிய ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் தனது புதிய ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 மாடலை, நவம்பர் 8 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 8 ஆம் தேதி மதியம் 12 மணிமுதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் எனவும் இதன் விலை ரூ.6,999 ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிக பேட்டரி பவர் மற்றும் பெரிய டிஸ்ப்ளே

அதிக பேட்டரி பவர் மற்றும் பெரிய டிஸ்ப்ளே

புதிய மாடலான ஸ்மார்ட் 4 அதிக பேட்டரி பவர் மற்றும் பெரிய டிஸ்ப்ளே மூலம் ஆதரிக்கப்படுகிறது. முதன்முறை ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தடையின்றி மொபைல் பயன்படுத்துவதற்கான அனுபவத்தை வழங்குகிறது. அதோடு சிறந்த மல்டிமீடியா அனுபவத்தை இந்த ஸ்மார்ட்போன் வழங்குகிறது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 விவரக்குறிப்புகள்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 விவரக்குறிப்புகள்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4., 6.82 இன்ச் எச்டி+ டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஏ22 குவாட் கோர் 64 பிட் செயலி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

2020 முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் பட்டியலின் முதலிடத்தில் ஒன்பிளஸ் 8டி 5ஜி!2020 முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் பட்டியலின் முதலிடத்தில் ஒன்பிளஸ் 8டி 5ஜி!

13 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

13 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4, பின்புறத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட இரட்டை கேமரா உள்ளது. முன்பக்கத்தில் எஃப்/2.0 துளை கொண்ட 2 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 பதிப்பில் இயங்குகிறது. நிறுவனத்தின் தனிப்பயன் எக்ஸ்ஓஎஸ் 6.2 மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பூஜ்ஜியத்தில் இருந்து முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணிநேரம் 10 நிமிடங்கள் ஆகலாம்.

பின்புறத்தில் கைரேகை சென்சார்

பின்புறத்தில் கைரேகை சென்சார்

பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது. இதில் ஃபேஸ் அன்லாக் அம்சமும் இருக்கிறது. இணைப்பு ஆதரவுகளாக வோல்ட்இ, வோவைஃபை மற்றும் டிடிஎஸ் சவுண்ட் சிஸ்டம் இருக்கிறது.

source: themobileindian.com

Best Mobiles in India

English summary
Infinix Smart 4 Set to Launching on November 8 with 6000 mAh battery

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X