Home
Mobile

மலிவு விலையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்று புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் முழுவிபரங்களைப் பார்ப்போம்.

ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.82-இன்ச் எச்டி பிளஸ் மினி டிராப் நாட்ச் கிளாஸ் டிஸ்பளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் 1640 x 720பிக்சல் திர்மானம் மற்றும் 20:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் 480nits பிரைட்நஸ்வசதியைக் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-

இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 12என்எம் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும்.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுகொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போனின்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் +டெப்த் சென்சார் என இரண்டு கேமரக்கள்
பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, மூன்று எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை
கொண்டுள்ளது.

6000எம்ஏஎச் பேட்டரி

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் சாதனத்தில் 6000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,மேலும் 10வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

வோல்ட்இ, வைஃபை,

குறிப்பாக இரட்டை 4 ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 4.2, ஜிபிஎஸ், இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ரூ.7,999-விலையில் இந்த சாதனம்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix Smart 4 Plus Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X