விரைவில்: ரூ.10,000-விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன்.!
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்,குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இந்நிறுவனம் சார்பில் ஒரு புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதாவது வரும் ஜூலை 21 ஆம் தேதி இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் சில குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் 6-இன்ச் டிஸ்பிளே வசதி மற்றும் 1640 x 720 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்புடன் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

குறிப்பாக புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஆனது மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் மற்றும் பவர்விஆர் ஜிஇ 8320 ஜி.பீ.யு ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.30-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720பிக்சல்கள் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் குவாட்-கோல் ஹீலியோ ஏ22 பிரசஸர் வசதி உள்ளது, மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 3 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளது,எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 3 பிளஸ் சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி செகன்டரி லென்ஸ் மற்றும் குறைந்த-ஒளி சென்சார் மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமராஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications