ஜூன் 8-க்கு அப்புறம் இதுதான்.. மட்ட ரேட்ல 5200mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. புது Infinix போன்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் இருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித் தூக்கும்படி இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 (Infinix Smart 20) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதி, விற்பனை, டிஸ்பிளே மற்றும் தடிமன் உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
வருகிற ஜூன் 8ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் டிஸ்பிளே, 7.7 எம்எம் தடிமன் பாடி உள்ளிட்ட விவரங்களும் வெளியாகி இருக்கின்றன. குளோபல் மார்கெட்டில் ஏற்கனவே வெளியாகிவிட்டது. ஆகவே, அதன் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 அம்சங்கள் (Infinix Smart 20 Specifications): 6.78 இன்ச் (720 x 1576 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுத்துள்ளது. ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மற்றும் வழக்கமாக கிடைக்கும் டைனாமிக் பார் (Dynamic Bar) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் கொடுத்துள்ளது. எக்ஸ்ஓஎஸ் 16 (XOS 16) மற்றும் போளக்ஸ் ஏஐ (Folax AI) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) இந்த ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது.
மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்டிமேட் (Octa Core MediaTek Helio G81 Ultimate) சிப்செட்டை கொடுத்து இருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 மாடலானது ஆட்டோ போகஸ் கொண்ட 8 எம்பி ரியர் கேமரா மற்றும் பிக்சடு போகஸ் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் கேமராவை கொடுத்து இருக்கிறது.
2கே 30எப்பிஎஸ் (2K 30FPS) வீடியோ ரெக்கார்டிங் கொடுத்து இருக்கிறது. ஏஐ கேம் (AI Cam), வீடியோ (Video), டூயல் வீடியோ (Dual Video), போர்ட்ராய்டு (Portrait), சூப்பர் நைட் (Super Night), ப்ரோ (Pro) உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்துள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5200mAh பேட்டரியை இந்த ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.
5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட ஸ்பிளாஷ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கொடுத்து உள்ளது. ஷேடோ பிளாக் (Shadow Black), போலாரிஸ் டைட்டானியம் (Polaris Titanium), சன்லைக் ஆரஞ்ச் (Sunlike Orange) மற்றும் கிளவுட்லைன் ப்ளூ (Cloudline Blue) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இது குளோபல் வெர்ஷனின் பீச்சர்களாக இருக்கிறது.
இந்திய வெர்ஷனிலும் இதே பீச்சர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பட்ஜெட் விவரங்கள் தெரியவரவி்ல்லை. இருப்பினும், ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதைவிட மலிவான விலைக்கும் வரலாம். ஏனென்றால், சிப்செட், ரேம் உள்ளிட்ட பீச்சர்கள் பேசிக் ஸ்மார்ட்போனை போலவே இருக்கின்றன.


Click it and Unblock the Notifications